பஞ்சு மெத்தையில் படுக்க வைக்கும் ராஜயோக ராகு!

ராகு என்பவர் எல்லாருக்கும் யோகர் என்றோ அல்லது அவயோகர் என்றோ சொல்ல முடியாது..
பஞ்சு மெத்தையில் படுக்க வைக்கும் ராஜயோக ராகு!
Published on
Updated on
3 min read

ராகு என்பவர் எல்லாருக்கும் யோகர் என்றோ அல்லது அவயோகர் என்றோ சொல்ல முடியாது. ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு அதாவது முற்பிறவியில் செய்த வினைப்பயன்படி பலன்களை கூறுவது ராகுவும் கேதுவும் ஆகும். இவர்களுக்கு சொந்தவீடு எதுவும் கிடையாது எந்தவீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டை சொந்தமாகி அந்த அதிபதியின் செயலை செய்வார்.

ஒருவர் நடந்தே சென்றவர் திடீரென்று விமானத்தில் சென்றார் என்றால் அங்கு ராகு வேலை செய்வதாக அர்த்தம். கோணி பாயில் படுக்கும் ஒருவரைப் பஞ்சு மெத்தையில் சுகமாகப் படுக்கவைக்க ராகுவால் தான் முடியும். மற்ற கிரகங்கள் திடீர் மாற்றத்தைத் தரமுடியாது. ராகுவால் மட்டும் தான் இந்த மாற்றத்தைச் செயல்படுத்த முடியும். ராகு என்பவர் ஒரேடியாக பொன், பொருள், புகழ் அனைத்தையும் கொடுத்து மேலே தூக்கி வைக்கும் ஒரு அதிர்ஷ்ட பாம்பு என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக இவருக்கு உகந்த உளுந்தை எடுத்துக் கொண்டால் கொஞ்சம் போட்டு அரைத்தால் எப்படி பன்மடங்கு ஆகுகிறதோ அப்படி ரெட்டிப்பு ஆகும் தன்மை ராகுவிற்கு உண்டு.

     கேளப்பா யின்னமொரு புதுமை கேளு

கனமான கரும்பாம்பு கேந்திரகோணம்

ஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட

அப்பனே சேர்ந்தாலும் கண்ணுற்றாலும்

சீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த 

சிவசிவா கிளர்யோகம் திடமாய் செப்பு

கூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க

குமரனுக்கு அனுதினமும் பலனைக் கூறே. 

 -புலிப்பாணி 

கரும்பாம்பு ஜாதகத்தில் லக்னத்திற்கு கேந்திர / திரிகோண ஸ்தானங்களிலோ சுபக்கிரகங்களின் பார்வை இருக்குமானால், சிவனருளினால் இந்த ஜாதகர் பெரும் செல்வந்தராக மற்றும் பெரும் யோகம் பெற்றவராவார். இதனை லக்னாதிபதி வைத்துக் கணித்து பலன் கூற வேண்டும் என்பது இப்பாடலின் பொருள்.

ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி

ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்து நிற்கில்

பூமேடை தனில் துயிலும் ராஜயோகம்

போற்றிடுவர் வேறு இன்னும் புகலக் கேளாய்

ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்

இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்

தேமேவு பர்வதமா யோகமாகும்

மான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே।    

- ஜாதக அலங்காரம் 

மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் ராகு இருந்து அந்த ராகுவுக்கு கேந்திரங்களில் ஒரு கேந்திரம் கூட பாக்கியமில்லாமல் வேறு கிரகங்கள் அமர்ந்திருந்தால் அது பர்வத யோகம் எனப்படும். இந்த ராஜயோகத்தில் பிறந்த ஜாதகருக்கு பெரும் பொருள் உள்ளவனாகவும், பூப்படுக்கையில் நித்திரை புரிகின்ற மற்றும் இதை சார்ந்த இதர யோகங்களும் அனுபவிப்பவனாகவும் இருப்பான் என்று இப்பாடலில் சொல்லப்படுகிறது. 

ஜாதக அலங்காரத்தில் சொல்லப்பட்ட மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ராகு அமர்ந்து 1, 4, 7, 10ல் கிரகங்கள் இருந்தால் தன்னுடைய ராகு திசையில் மிகப்பெரிய ராஜயோகத்தை அள்ளித்தருவார். ராகுவிற்கு சூரியனும் சந்திரனும் முக்கிய எதிரிகள் அதிலும் ஒருவித சூட்சமம் உள்ளது. ஒன்பது கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும், சூரியனை விட ராகு பலம் பெற்றவர் ஆவார். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் அனைத்தும் ராகு கேதுக்களின் ஆதிக்கம் தான் என்று அறிவியல் ஜோதிடம் சொல்கிறது. சிம்ம சூரியனில் ராகு அதிக பிரச்சனைகளை தருவார். நிறயபேருக்கு தெரிந்திருக்கும் சிம்ம ராசியில் ராகு பிறவேசிக்கும் காலம் ஜாதகர் தாங்கமுடியாத அடி வாங்கியிருப்பார்கள். சந்திரன் கூட கொஞ்சம் தப்பித்துவிடும் என்று கீழ் வரும் பாடல் கூறப்படுகிறது.

இடபம் மேடம்நண்(டு) இம்மூன்று ராசியும் 

அடரும் லக்கின மாக அதனுள்ளே 

தொடரும் மாவிட ராகுறச் சூழ்ந்திடப்   

படரும் உத்தமம் என்று பகர்வரே !    

- கலிவிருத்தம்  

ரிஷபம், மேஷம், கடகம் ஆகிய மூன்று ராசிகளில் எதாவது ஒன்றில் லக்கினமாக அமைந்து அதில் ராகு அமர்ந்திருந்தால் அந்த ராகுவால் ஜாதகனுக்கு நற்பலனை நிரம்ப நடைபெறும் என்று இவற்றில் பொருள். மேஷத்திற்கும், கடகத்திற்கும் ராகு பகை மற்றும் கடகத்தில் உள்ள சந்திரனுக்கு ஜென்ம விரோதி அதோடு இல்லாமல் ரிஷபத்தில் ராகு நீச்சம் இருந்தாலும் இந்த இடத்தில லக்கினமாக பிறந்தவர்கள் ராகுவால் நன்மை ஏற்படும்.

ராகுவின் காரகத்துவதை பற்றி சிறிது தெரிந்துகொள்வோம் குலவிரோதம் செயல்கள், அந்நிய திருமணம், விதவையோடு திருமணம், பேய் பிசாசாசு பில்லிசூனியம், மாயாஜால வித்தைக்களை எதாவது வழியில் எடுத்துக்கொள்வது, பிராணிகளால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்வது, கீழ்த்தரமான சட்டத்திற்கு புறம்பான செயல், சிறைக்குச் செல்லும் அனைத்து செயல்களும் என்றவுடன் அந்தெந்த பாவங்களில் ராகு வந்துவிடுவார். 

நோய் என்று கூறினால் ஒருவருக்கு வலிப்பு நோய், வாத சம்பந்தப்பட்ட நோய்கள்,  பிளவை நோய், பைத்தியம், மயக்கம், தோல் வியாதி, குஷ்டம், குடல் நோய்,  பித்த நோய்,  கெட்ட செல்களை/ பாக்டீரியாவை அதிகப்படுத்தும் தன்மை (eg.புற்று நோய் கிருமி அதிகமாக்கும் தன்மை). ஜாதகர் ராகுவின் நக்ஷத்ரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம்  ஆகிய நக்ஷத்ரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு பலம் பெற்றிருக்கும். அதனால் தான் பாம்பை அணிந்த சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திலும் மற்றும் பெருமாளின் அவதாரம் கோபக்கனல் கொண்ட ஸ்ரீநரசிம்மமூர்த்தி சுவாதி நட்சத்திரத்திலும் மற்றும் ஆகாயம் மற்றும் நீர் நிலையின் வேந்தன் வருணன் சதய நட்சத்திரத்திலும் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் நான் பார்த்த முக்கால்வாசி ஜாதகருக்கு நோயின் தாக்கம் அதிகம் இருக்காது. ஏனென்றால் இவர்கள் ராகுவின் ஆதிக்கம் பெற்ற பலசாலிகள்.

மேற்கண்ட அமைப்பு அனைத்தும் ராகு திசை வந்தால் திடீர்யென்று லாபத்தையும், பெரிய சொத்து சுகத்தையும், புதையல் வழியாகவும், அரசியல் ஆட்சியும் மற்றும் திடீர்   யோகத்தை ராகு கொடுக்கும் ஆற்றல் கொண்டவர். ஆனால் இது ஒரு மாயையை என்று கோட்டுக்குள் நிற்கும். திடீர் அதிர்ஷ்டம் என்பது பெரும் ஆபத்து ஆகும். ராகு என்பவர் ஆசையை தூண்டுபவன் அந்த வேகமானது தடையை ஏற்படுத்தும் என்று கூறலாம். அவர் எந்த பாவத்தில் இருக்கிறாரோ அங்கு அவர் தன் தடையாய் ஏற்படுத்துவார் என்பது உறுதி அதை எதிர்கொள்ளும் தன்மை ஜாதகருக்கு ஏற்பட்டால் ரெட்டிப்பு பலன் கிட்டும் இல்லையென்றால் மேலிருந்து கீழே வீழ்வார். ராகுவால் சம நிலையில் நிற்க தெரியாது.

குருவே சரணம்

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com