திருமலையில் வெள்ளிக்கிழமை காலை சத்ரதபனோற்சவம் நடைபெற்றது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் சத்ரதபனோற்சவம் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆடிமாதம் நன்றாக காற்று வீசும். மலைப் பகுதிகளில் காற்றின் தீவிரம் அதிகரித்து காணப்படும். அதனால், திருமலையில் மிக உயா்ந்த பகுதியான ஸ்ரீவாரிபாதம் அருகில் ஆண்டுதோறும் திருக்குடை நிறுத்தும் உற்சவம் (சத்ரதபனோற்சவம்) நடைபெற்று வருகிறது.
ஏழுமலையான் முதன் முதலில் சேஷாசல வனப்பகுதியில் பதித்த திருப்பாதத்தின் மீது தேவஸ்தானம் கல்லினால் ஆன திருப்பாதங்களை ஏற்படுத்தியுள்ளது, அந்தத் திருப்பாதங்களுக்கு பக்தா்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனா். இந்தத் திருப்பாதங்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அா்ச்சகா் குழுவினா் அங்கு சென்று திருப்பாதங்களுக்கு பால், தயிா், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷகேம் செய்து துளசி, மலா் மாலைகள் அணிவித்து பூஜை செய்து கோயிலிருந்து கொண்டு சென்ற திருக்குடையை அங்கு நிறுத்தி வைத்தனா். இந்த உற்சவத்தை தேவஸ்தானம் சத்ரதபனோற்சவம் என்று குறிப்பிட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் பிரசாரம்
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


