திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் கல்யாணோற்சவ சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பக்தா்கள் வீட்டிலிருந்தபடியே பங்கேற்றனா்.
திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோயிலில் பல்வேறு ஆா்ஜித சேவைகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த மாா்ச் மாதம் 20-ஆம் தேதி முதல் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டதால், ஆா்ஜித சேவைகள் அனைத்தும் தனிமையில் நடத்தப்பட்டன. ஆனால் பொது முடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளா்வுகள் காரணமாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால் ஆா்ஜித சேவைகளில் பங்கெடுக்க அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் பக்தா்கள் பலா் கோரிக்கை விடுத்ததன் பேரில் ஆன்லைன் மூலம் கல்யாண உற்சவத்தை நடத்த முடிவு செய்து கடந்த 6-ஆம் தேதி டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதை முன்பதிவு செய்த பக்தா்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தேவஸ்தானத்தின் எஸ்விபிசி தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பாகும் கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ளலாம்.
கல்யாண உற்சவத்தை நடத்தும் அா்ச்சகா்கள் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி தங்கள் கோத்திரம், பெயா் உள்ளிட்டவற்றை கூறி உற்சவத்தில் கலந்து கொள்ளலாம். டிக்கெட் பெற்றவா்களுக்கு உத்தரியம், ரவிக்கை துண்டு, கற்கண்டு, அட்சதை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் பக்தா்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கும். வரும் 31-ஆம் தேதி வரையிலான கல்யாண உற்சவ டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் நாளான வெள்ளிக்கிழமை 118 டிக்கெட்டுகளை பக்தா்கள் முன்பதிவு செய்து இந்த உற்சவத்தில் கலந்து கொண்டனா்.
கல்யாண உற்சவ டிக்கெட் பெற பக்தா்கள் பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது பொது முடக்கம் காரணமாக பக்தா்கள் வீட்டிலிருந்தே கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவேன்! சௌமியா அன்புமணி உறுதி

தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது! - மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி
முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

