குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரகப் பெயர்ச்சியான ராகு - கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது.
ராகு - கேது பெயர்ச்சிக்கான பொது பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார்.
சாயா கிரகங்களான ராகு - கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார். ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீசார்வரி வருஷம் - தக்ஷிணாயனம் - வர்ஷ ரிது - ஆவணி மாதம் 16ம் தேதி - செவ்வாய்க்கிழமை - 01.09.2020 - அன்றைய தினம் தினசுத்தி அறிவது - பௌர்ணமியும் - அவிட்ட நக்ஷத்ட்ரமும் - அதிகண்ட நாமயோகமும் - பத்ரை கரணமும் - சித்தயோகமும் - கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மதியம் 2.16க்கு (நாழிகை: 20.24) தனுசு லக்னத்தில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மாறக்கூடிய ராகு பகவான் பிலவ வருஷம் - உத்தராயணம் - சிசிர ரிது - பங்குனி மாதம் 07ம் தேதி (07.03.2022) - திங்கள்கிழமை வரை ரிஷபத்தில் இருந்து அருளாசி வழங்குவார்.
கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மாறக்கூடிய கேது பகவான் பிலவ வருஷம் - உத்தராயணம் - சிசிர ரிது - பங்குனி மாதம் 07ம் தேதி (07.03.2022) - திங்கள்கிழமை வரை விருச்சிகத்தில் இருந்து அருளாசி வழங்குவார்.
பெயர்ச்சி ஆகும் நாயகர்களால் லோகத்திற்கும் நமக்கும் நற்பலன்கள் பெற பிரார்த்தனைகள் அவசியம்.
ராகு - கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.
பொது பலன்கள்:
அறிவியல் பூர்வமாக நமது டிஎன்ஏ-தான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு - கேது என்னும் கிரகங்கள் டிஎன்ஏ போலதான். ராகுவை வைத்து தகப்பனார் வழிகளையும் - கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்துகொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர்.
ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் - பிதுர் தோஷம் - புத்திர தோஷம் போன்றவற்றைச் சொல்ல முடியும். கல்வி - ஞானம் - திருமணம் - மக்கட்பேறு - வேலை - வெளிநாடு சம்பாத்தியம் - கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு - கேது முக்கியமானவர்களாகும்.
கடக ராசி மற்றும் மகர ராசி என்பது சர ராசியாகும். இதில் கடக ராசி பஞ்ச பூத தத்துவத்தில் நீரையும் - மகர ராசி என்பது பஞ்ச பூத தத்துவத்தில் நிலத்தையும் குறிக்கும். ராகு என்பது மிகப் பெரிய என்ற விஷயங்களையும் கேது என்பது குறுகிய விஷயங்களையும் குறிக்கும்.
இந்த பெயர்ச்சியினால் வறட்சி குறையும். மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். ஏரி, குளம் போன்றவை நிரம்பும். அரசாங்கம் சார்ந்த விஷயங்களிலிருந்து வந்த குழப்ப நிலை நீங்கும். புதிய ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தண்ணீர் சார்ந்த இடங்களில் அதிகளவு விபத்து - அகால மரணங்கள் போன்றவை ஏற்படும்.
விமானம் - கப்பல் போன்றவற்றில் அடிக்கடி பழுதாவதும் அதை சரி செய்வதுமாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஐரோப்பிய தேசங்களில் இருந்து வந்த தொய்வு நீங்கும். அமெரிக்க தேசத்தில் இருந்து வரும் சுணக்க நிலை மாறும்.
இஸ்லாமிய தேசங்களில் ஒற்றுமையுணர்வு ஓங்கும். இந்திய தேசத்தைப் பொருத்தமட்டில் ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள் ஏற்றம் பெறும். ராணுவ ரீதியாக மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியத்தைப் பொருத்தவரை புதிய புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். ரியல் எஸ்டேட் துறை கொஞ்ச கொஞ்சமாக வளர்ச்சி அடையும்.
ராகு
தன்மை - பெண்
வடிவம் - நெடியர்
நிறம் - கறுப்பு
குணம் - தாமஸம்
பிணி - பித்தம்
திக்கு - தென்மேற்கு
ரத்தினம் - கோமேதகம்
தான்யம் - உளுந்து
புஷ்பம் - மந்தாரை
சமித்து - அறுகு
வாகனம் - ஆடு
சுவை - கைப்பு
உலோகம் - கருங்கல்
ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை வருட காலம்
வஸ்திரம் - கறுப்பு
தேவதை - காளியம்மன்
உச்ச ராசி - விருச்சிகம்
நீச ராசி - ரிஷபம்
நட்பு ராசி - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம்
மூலத் திரிகோணம் - கும்பம்
நக்ஷத்ரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம்
திசை வருடம் - 18 வருடங்கள்
நட்பு கிரகம் - சுக்கிரன், சனி
பகை கிரகம் - சந்திரன், செவ்வாய், சூரியன்
பார்வை - 7-வது பார்வை
காரகன் - பிதாமககாரகன்
உறுப்பு - கணுக்கால், முழங்கால்
கேது
தன்மை - அலி
வடிவம் - நெடியர்
நிறம் - சிவப்பு
குணம் - தாமஸம்
பிணி - பித்தம்
திக்கு - வடமேற்கு
ரத்தினம் - வைடூரியம்
தான்யம் - கொள்ளு
புஷ்பம் - செவ்வல்லி
சமித்து - செம்மரம்
வாகனம் - சிங்கம்
சுவை - உரைப்பு
உலோகம் - துருக்கல்
ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை வருட காலம்
வஸ்திரம் - பலவண்ணங்கள்
தேவதை - வினாயகர்
உச்ச ராசி - கும்பம்
நீச ராசி - சிம்மம்
நட்பு ராசி - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
மூலத் திரிகோணம் - சிம்மம்
நக்ஷத்ரங்கள் - அஸ்வினி, மகம், மூலம்
திசை வருடம் - 7 வருடங்கள்
நட்பு கிரகம் - சுக்கிரன், சனி
பகை கிரகம் - சந்திரன், செவ்வாய், சூரியன்
பார்வை - 7-வது பார்வை
காரகன் - மாதாமகாரகன்
உறுப்பு - கை, தோள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காக்களூா் ஏரியில் ரூ. 3.52 கோடியில் சீரமைக்கப்பட்ட பணிகள் மற்றும் நடைபாதை தளம்

தடைகள் தகரும் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!

தேசியப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து: சோனம் வாங்சுக் சிறையில் இருந்து விடுதலை

பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

