ஜாதகத்தில் கர்மாவின் தாக்கங்கள் எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்?

ஜாதகத்தில் கர்மாவின் தாக்கம் உள்ளதா? இல்லையா எப்படித் தெரிந்துகொள்ளலாம் என்று இக்கட்டுரையில் பார்ப்போம்..
கர்மாவின் தாக்கம்
கர்மாவின் தாக்கம்
Published on
Updated on
2 min read

ஒருவரது ஜாதகத்தில் கர்மாவின் தாக்கம் உள்ளதா? இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம் என்று இக்கட்டுரையில் விளக்கமாகப் பார்ப்போம்.

விளக்கமான ஜாதகக் கட்டத்தில் ஆய்ந்து, நீண்டதொரு பயணம் செய்தால் ஒழிய இதனை அறிவது மிகக்கடினம். இதனை சாதாரணமாகக் காண்பதில் பல சிக்கல்கள் உள்ளது. நீண்ட அனுபவமிக்க ஜோதிடர்களின் உதவியால் தான் இதனைக் காண முடியும்.

இதனைக் கண்ட பின்னர் அதற்கான தக்க பரிகாரங்கள் செய்தால், ஜாதகருக்கும் அவர் தம் வழியில் பின்னாளில் வரும் அவரது சந்ததியினருக்கும் அந்த கர்மாவின் தாக்கம் இல்லாது அழிவதோடு சந்ததியின் ஜாதகத்தில் கர்மாவின் கிரகங்கள் இல்லாது போகும்.

கர்மாவின் தாக்கம்
திருமண பொருத்தத்தில் விலங்குகளின் பங்கு!

கர்மாவின் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும்?

எந்த காரியத்திலும் தடை. இலக்கு அற்ற நீண்டதொரு பயணம் போன்றதொரு வாழ்க்கை.

உழைத்த உழைப்பு வீணாகப் போதல், முக்கியமாக சுப காரிய தடைகள், தொடர் விபத்து, நோய், மனக்கஷ்டம், பணக்கஷ்டம், நோயிலிருந்து விடுபடாமல் போதல், சரியான மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவர் கிடைக்காமல் / அறியாமல் போதல், தெரிந்த / அறிந்த கோயில் மற்றும் புண்ணிய காரியங்கள் செய்தும், விடாமல் துரத்தும் பிரச்னைகள் என கர்மாவின் தாக்கங்கள் இருந்தால் இதுபோன்று தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

ஒருவரின் கர்மாவை காட்டுபவை எது?

ஒருவரின் ஜாதகத்தில் நிற்கும் கிரகங்களின் சார நட்சத்திரத்தின் மூன்றாவது நட்சத்திரம் குறி காண்பிக்கும். இந்த மூன்றாவது நட்சத்திரத்தில் அந்த ஜாதகத்தில் நிற்கும் கிரகங்களாலேயே ஒருவருக்கு கர்மா பற்றிய அளவுகோல் / கர்மாவின் தொல்லைகள் தெரியவரும். இதனை நீங்களாகவே போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் தகுந்த ஜோதிடரின் ஆலோசனையின்படி அறிந்து அதற்கேற்ற தக்க பரிகாரங்களைச் செய்துகொள்ளலாம்.

கர்மாவின் தாக்கம்
பங்குச்சந்தை யாருக்கெல்லாம் கைக்கொடுக்கும்?

கர்மாவிற்கான பரிகாரங்கள்

மேற்கூறிய கர்மாவை குறி காட்டும் கிரகங்களை அறிந்து அவை நிற்கும் ராசி நெருப்பு ராசியா,

நீர் ராசியா, காற்று ராசியை, நில ராசியா என அறிந்து அதற்கேற்ப தக்க பரிகார நிவர்திகள் செய்தால் நிச்சயம் கர்மா பாதிப்பிலிருந்து ஒருவர் வெளியே வரலாம். அதன் பிறகு அந்த ஜாதகருக்கு, கர்மாவினால் தொல்லைகள் வராது மற்றும் அவர் சந்ததியினருக்கும் இதுபோன்ற கிரக அமைப்பு வராமல் போவதையும் காணலாம்.

செய்ய வேண்டியது என்ன?

அவதியுறும் ஜாதகர்கள், தக்க ஜோதிடர்களை கண்டு அவரிடம் தமது பிரச்னைகளை கூறி அதற்கேற்ற கர்மா பரிகாரங்களை அறிந்து அதிலிருந்து, வெளியேறுவதற்கு

முயற்சி செய்தல் வேண்டும். ஜோதிடர்கள், ஜாதகரின் பிறப்பு குறிப்பைப் பெற்று தாமாகவே ஜாதக கட்டம் எடுத்து அதிலுள்ள கர்ம கிரகங்களை ஆராய்ந்து ஜாதகரிடம் அதனை எடுத்துச் சொல்லி அந்த கர்மாவை உறுதிப்படுத்திய பின்னர் தக்க பரிகாரங்களை உணர்த்துதல் அவசியமாகிறது.

கர்ம பரிகாரம் செய்த பின்னர் செய்ய வேண்டியவை என்னென்ன?

தேவையான பரிகாரங்களை செய்து முடித்த பின்னர், குலதெய்வ வழிபாடு செய்வதும், அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ற சிவ வடிவத்தைத் தொழுதலும், அதன்பின்னர் அவரவர் கரண நாதரை எப்படி வணங்க வேண்டும் என்பதனை அறிந்து வழிபட்டால் வாழ்வில் அனைத்து நலன்களும் நடைபெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கர்மாவின் தாக்கம்
சொந்தத் தொழிலா, அடிமைத் தொழிலா: ஜோதிடத்தில் அறிய முடியுமா?

தற்போது, அனைத்து சமூக ஊடகத்திலும் நட்சத்திர பரிகாரங்கள், கரண நாதருக்கேற்ற பரிகாரங்கள் போன்றவை அறியப்படலாம். ஆனால், கர்மா பரிகாரம் செய்யாமல் இவற்றை செய்வதினால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை, சிரமம் இருக்கவே செய்யும். அதோடு இந்த கர்மா பரிகாரத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக் கூறுவதும் முடியாது. தக்க ஜோதிடர்களை அறிந்தே இதனை செய்திடல் வேண்டும்.

இதில் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டியுள்ளது. இந்த கர்ம பரிகாரம் கண்டு சொல்லும் ஜோதிடருக்கு சிலரின் கடினமான கர்மாவால் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும் என்பதால், அவர்களின் கட்டணமும் சற்று அதிகமாகவே இருந்திடல் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஜாதகருக்கு கர்ம விடுதலை அளித்த பின்னர் ஜோதிடரும் தம்மை கர்மா தாக்குதலுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வதும் முக்கிய காரணமாகிறது.

எல்லோரும் இன்புற்று இருக்க ஜோதிடர்களின் பங்கு, ஒரு விஷயத்தை முன்கூட்டி அறிவித்தல் போன்றதொரு செய்கையால், நிறைவேறும் வரை ஓயக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு - 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.