ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல முருகனுக்கும் உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.
ஆடி மாதம் முழுவதுமே அம்மன் வழிபாட்டிற்குரிய வழிபாட்டு மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்களும், சிறப்பு வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறும்.
அதேசமயம், தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கும் ஆடி மாதம் விசேஷமாகக் கருதப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி விரதம் ஆகியவை முக்கியமான நாள்களாகக் கருதப்படுகிறது. அதிலும், முருகனின் முக்கிய விஷேச நாள்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் ஆடிக் கிருத்திகை மேலும் சிறப்பானது.
கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரைக் குறிக்கும். அதுவே காலப்போக்கில் கிருத்திகை என்று மாறியுள்ளது. தை கிருத்திகையை விட ஆடிக் கிருத்திகை சிறப்பு வாய்ந்தது.
அன்றைய தினம் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிராத்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், வீதியுலா நடைபெறும்.
அப்பேர்பட்ட விசேஷமான ஆடிக் கிருத்திகை 2026-ல் எப்போது வருகின்றது என்று தெரிந்துகொள்ளவேண்டாமா...
ஆடிக்கிருத்திகை இந்த வருடம் இரண்டு நாள்கள் ஒன்றுப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு 6.19-க்கு தொடங்கி ஆகஸ்ட் 7 மாலை 5.52-க்கு நிறைவடைகிறது. விரதம் மேற்கொள்பவர்கள் இந்த நேரத்தைக் கடைப்பிடிக்கலாம்.
இந்த நன்னாளில் மக்கள் தங்கள் அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று மனமுருகி வேண்டுதல்களைச் செய்துவந்தால், நிச்சயம் நிறைவேறும்.
Aadi krithigai 2026 date | ஆடிக் கிருத்திகை 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










