மாங்கல்ய பலம் கூடப் பெண்கள் வழிபட வேண்டிய வாசவி கன்னிகா பரமேஸ்வரி!

சித்திரை மாதத்தில் வரும் தசமி திதியையே வாசவி ஜெயந்தியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். 
மாங்கல்ய பலம் கூடப் பெண்கள் வழிபட வேண்டிய வாசவி கன்னிகா பரமேஸ்வரி!
Published on
Updated on
1 min read

சித்திரை மாதத்தில் வரும் தசமி திதியையே வாசவி ஜெயந்தியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். 

வாசவி ஜெயந்தியா! அது என்ன? எதற்காக இது கொண்டாடப்படுகின்றது? வாங்கப் பார்க்கலாம். 

திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் காவலாய் இருந்து வணங்கி வந்தார் நந்தியம் பெருமான். ஒரு நாள் நந்தி தேவர் குளித்து முடித்து விட்டு தேவியை தரிசிக்காமல் இறைவனை மட்டும் வணங்கினார். இதனால் கோபம் கொண்ட தேவி, நந்திதேவரை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார். பதிலுக்கு நந்திதேவரும் பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்து வளர்ந்து அக்னியில் இறங்கி இறைவனை அடைவாய் என்று சாபமிட்டார். ஒரு சமயம் துர்வாச மகரிஷி சிவபெருமானை தரிசிக்க வந்தபோது சமாதி மகரிஷி மறுக்க, துர்வாசர் முனிவரில் சாபத்திற்கு ஆளானார். 

ஒரு ஊரில் விருபாட்சன் வாசம்பா என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாள் குழந்தையில்லாமல் இறைவனை வழிபட்டதன் பயனாக இவர்களுக்கு குசுமாம்பிகா (வாசவி) என்ற பெயரில் பார்வதி தேவியும், சிரேஷ்டி என்ற பெயரில் சமாதி மகரிஷியும் பிறந்தனர். வாசவின் அழகைக் கண்டு விஷ்ணுவர்த்தன் என்ற மன்னன் அவனை மணம்முடிக்க விரும்பினான். மன்னன் தனது விருப்பத்தை வாசவியின் பெற்றோர்களிடம் தெரிவிக்க வைசிய குல தர்மப்படி அவளை மணமுடித்து தர இயலாது என்று தந்தை கூறிவிட்டார்.

வைசிய குலத்தவர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தனது திருமணத்தில் இத்தனை குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்ட வாசவி மனம் உடைந்து அக்னி வளர்த்து அதில் குதித்து உயிர் நீத்தாள். தங்களால் தான் இந்த தவறு நேர்ந்தது என்று வைசிய கோத்திரக்காரர்களும் அக்னியில் உயிர்நீத்தனர். இதைக் கண்டு வருந்தமடைந்த மன்னனும் உயிர்விட்டான். 

நந்திதேவரின் சாபப்படி வாசவியாக பிறந்து வளர்ந்து அக்னியில் குதித்த பார்வதிதேவி ஆரியகுல வைசியர்களுக்குக் காட்சி தந்து அருளினாள். அன்று முதல் ஆரிய வைசிய மக்கள் பார்வதி தேவியை தங்கள் குலதெய்வமாக வாசவி கன்னிகா பரமேஸ்வரி என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தனர். 

தை அமாவாசைக்கு அடுத்து வரும் இரண்டாவது நாள் சுக்ல துவிதியை அன்று அக்னி குண்டத்தில் தேவி இறங்கியதால் அன்றைய தினத்தை அக்னி பிரவேச தினமாக ஆரிய வைசியர்கள் கொண்டாடுகின்றனர். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாக மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். பெண்கள் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கவும், மாங்கல்ய பலம் கூடவும் வாசவி ஜெயந்தியை வழிபடுகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com