

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சுதா நாராயணமூர்த்தி பதவியேற்றுக் கொண்டார்.
தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு கடந்த சனிக்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டது. அப்போது, அதன் தலைவர் சுதாகர் யாதவ் உட்பட 12 உறுப்பினர்கள் ஏழுமலையான் கோயில் வளாகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட சுதா நாராயணமூர்த்தி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஏழுமலையான் கோயிலுக்குள் கருடாழ்வார் சந்நிதி அருகில் தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஏழுமலையான் தரிசனம் முடித்து திரும்பி வந்த அவருக்கு அதிகாரிகள் சிறப்புப் பிரசாதங்களை வழங்கினர். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரண்டாவது முறையாக தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழுமலையான், தாயாரின் கருணையால் மீண்டும் இப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளேன். பக்தர்களின் சேவையில் எப்போதும் மனநிறைவைக் காண்பேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.