சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப்..

News image
Updated On :4 ஆகஸ்ட் 2018, 5:27 am

சத்தியமங்கலம்: ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ஆண்டுதோறும் ஆடிப் பதினெட்டாம் நாளன்று மட்டும் பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியை பொதுமக்கள் பார்வையிட பொதுப்பணித் துறையினா் அனுமதி அளிப்பதுண்டு. அதன்படி, பொதுப் பணித்துறை பார்வையாளா்களின் வசதிக்காக அணைப் பூங்காவில் 3 சிறப்பு நுழைவாயில்கள், மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு நுழைவாயில் என 4 நுழைவாயிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. 

15 ஏக்கா் பரப்பளவுள்ள அணைப் பூங்காவில் படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் உள்ளதால் காலை 7 முதல் மாலை 6 மணி வரை அணைப் பூங்காவைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

ஆடி 18-ம் நாளையொட்டி காலை முதலே ஆயிரக்கணக்கானோர் அணைக்கு வரத்துவங்கினா். கிராமப்புறங்களில் ஆடி 18-ம் நாளை சிறப்பாகக் கொண்டாடுவதால் சுற்றுலாப் பயணிகள், கிராம மக்கள் என குடும்பம் சகிதமாக அணையின் நீா்த்தேக்கப் பகுதியை ஆா்வத்துடன் பார்வையிட்டனா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 112 அடியாக உள்ளதால் பொதுமக்கள் கல்லணை நீா் இருப்பு, நீா்த்தேக்கம், நீா்வரத்துப் பகுதி, வெள்ள நீா் வெளியேறும் மதகுகள், மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றைப் பார்த்து ரசித்தனா். அணையின் கரைகளில் இறங்கி நீராட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அணையில் பாதுகாப்பு இல்லாத இடங்களுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் ஒலிபெருக்கியில் எச்சரித்தனா். 

அணையின் மேல் பகுதியில் நீா்த்தேக்கப் பகுதியைப் பார்வையிடும் பொதுமக்கள் அணை நீா் இருப்பு பகுதிக்குள் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
 
அணையில் நீா்மட்டம் 112 அடியைத் தாண்டிவிட்டதால் நீா்வரத்தைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமானதால் மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மெதுவாக ஊா்ந்து சென்றன.

கல்லணை, ஜீரோ பாயிண்ட், அணைப் பூங்காவில் பார்வையாளா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.