கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திருத்தணி: தெப்போற்சவத்தில் வலம் வந்த முருகப்பெருமான்

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடிக்கிருத்திகை விழாவில் இரண்டாம் நாளான திங்கள்கிழமை சரவணப்பொய்கையில்

திருத்தணி கோயில் ஆடிக்கிருத்திகை விழாவில், சரவணப்பொய்கையில் இரண்டாம் நாள் தெப்போற்சவம். (உள்படம்) தெப்பலில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான். 

Updated On :


திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடிக்கிருத்திகை விழாவில் இரண்டாம் நாளான திங்கள்கிழமை சரவணப்பொய்கையில் தெப்போற்சவத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோயிலில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பல் விழா நடந்து வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் தெப்பல் உற்சவம் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. திங்கள்கிழமை இரண்டாம் நாள் தெப்பல் உற்சவத்தையொட்டி, அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
தொடர்ந்து, மூலவருக்கு தங்கக் கீரிடம், தங்கவேல், பச்சைமாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அப்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டனர்.
மாலை 6.30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக வந்து, மலையடி வாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். 
அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், இரவு 7.30 மணிக்கு பக்தி இன்னிசைக்கச்சேரியுடன் தெப்பம் உலா வந்தது.
இந்த இரண்டாம் நாள் விழாவில், உற்சவர் ஐந்து முறை குளத்தைச் சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளக்கரைப் படிகளில் குவிந்திருந்தனர். சில பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 7) மாலை மூன்றாம் நாள் தெப்பல் உற்சவத்துடன் ஆடிக்கிருத்திகை விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
திருப்போரூர் கோயிலில்...
 திருப்போரூர் கந்தசாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. 
ஆடிக் கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
முத்தங்கி சேவை அலங்காரத்தில் முருகன், வள்ளி தெய்வானை காட்சியளிக்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. 
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடித்துக் கொண்டனர். ஏராளமான குழந்தைகள், பெண்கள், கன்னிப்பெண்கள், ஆண்கள் ஆகியோர் நாக்கில் அலகு குத்தியும், பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி ஆகியவற்றை எடுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். ஆண்கள் உடலில் வேல்குத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 
காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் ஏராளமான போலீஸார் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 
இதேபோல், செங்கல்பட்டு பகுதியில் உள்ள முருகன் கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி சிறப்பு அபிஷேக அலங்காரம், சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
வல்லக்கோட்டையில்...
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை வள்ளி தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருவீதி உலா நடைபெற்றது. இதில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.