தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

சாவன் மாத சிவராத்திரி: வடமாநிலங்களில் சிறப்பு வழிபாடு!

இந்துக்களின் புனித மாதம் என்று அழைக்கப்படும் சாவன் மாதத்தில் வரும் சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

இந்துக்களின் புனித மாதம் என்று அழைக்கப்படும் சாவன் மாதத்தில் வரும் சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. 

ஆடி மாதம் வடமாநிலங்களில் சாவன் மாதம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் குறிப்பாக திங்கட் கிழமைகளில் அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றது. இந்த மாதத்தில் கங்கையிலிருந்து புனித நீரெடுத்து, தங்களது ஊரில் உள்ள சிவன் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். 

வடமாநிலங்களில் சாவன் மாதம் முழுவதும் சிவபெருமானுக்கு முக்கியத்துவம் அளித்து வழிபாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். அந்த மாதம் முழுவதும் சிவபக்தர்கள் சிவபெருமானைப் பக்தியோடு பூஜித்து வழிபடுகின்றனர். சாவன் மாதத்தில் வரும் சிவராத்திரி இன்று அனுசரிக்கப்படுகிறது. மாதாமாதம் வரும் சிவராத்திரியை விட பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் விசேஷமானது. உத்தரகண்ட் மாநிலத்தில் சாவன் மாத சிவராத்திரி மிகவும் விஷேசமாகக் கொண்டாடப்படுகிறது. 

மேலும்,  உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹாகலேஷ்வர், முப்பையில் உள்ள பாபுல்நாத் மற்றும் தில்லியில் உள்ள கெளரி சங்கர், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாத் உள்ளிட்ட சிவன் கோயிலில் பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் நின்று வழிபாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.