
திருமலையில் மகாசம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் முடிவில் தேவஸ்தானம் திடீர் மாற்றத்தைச் செய்துள்ளது.
திருமலையில் வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களுக்கு தர்ம தரிசனத்தில் ஏழுமலையான் தரிசனம் வழங்கப்படும் என்றும் விஐபி தரிசனம் உட்பட மற்ற அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படும் என்றும் தேவஸ்தானம் கடந்த 2 நாள்களுக்கு முன் அறிவித்தது.
இந்நிலையில், அந்த முடிவில் திடீர் மாற்றத்தை தேவஸ்தானம் செய்துள்ளது. கோயிலுக்குள் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், 9ஆம் தேதி நள்ளிரவு 12 மணிமுதல் வரும் 16ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நேர ஒதுக்கீட்டு தரிசனங்களான தர்ம தரிசனம், திவ்ய தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நாள்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை தர்ம தரிசனத்தில் மட்டும் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






