திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் ஆக.,24-ல் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா இந்தாண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் ஆக.,24-ல் தொடக்கம்
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா இந்தாண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு தீபத்திருவிழா நவம்பர் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 23-ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறுகிறது. 

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக வருகிற 24-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்ச ரதங்களைப் பழுது நீக்கி பவனிக்கு தயார் செய்தல் திருக்கோயில் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும். இந்தத் தகவலை கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.