கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மகோற்சவ திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கேரளத்தில் உள்ள ஐயப்பனின் 5 படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் சிறப்பு வாய்ந்ததாகும். தனித்தீவு போன்று அமைந்துள்ள இந்தப் பகுதியில் சுவாமி ஐயப்பன் அரசனாக இருந்து ஆட்சி புரிவதாக ஐதீகம். கேரளத்தில் தேரோட்டம் நடைபெறும் ஒரே ஐயப்பன் கோயில் இதுவாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் மகோற்சவ திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 18, 19, 20ஆம் தேதிகளில் உற்சவவாரி திருவிழாவும், 21ஆம் தேதி அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. 5, 6, 7ஆம் நாள் திருவிழாவில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 11.45 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி கோயிலை சுற்றி உள்ள ரதவீதிகளில் செண்டை மேளம் முழங்கிட பக்தி கோஷத்துடன் வலம் வந்தார். பிற்பகல் 2.20 மணி அளவில் தேர் நிலையை வந்தடைந்தது.
சுமார் 50 அடி நீளம் கொண்ட மூங்கிலை கட்டி இழுக்கும் இத்தேரோட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். புதன்கிழமை (டிச. 26) ஆறாட்டு விழா நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது : ரூ.2.47 லட்சம் கோடி கடன்!!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 32 பேர் பலி: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



