
சேலம், மேச்சேரியில் அமைந்து பசுபதீஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.
மேச்சேரி அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பழமை வாய்ந்த திருக்கோயிலான பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும், மாசி 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிக் கதிர்கள் படும். அந்தவகையில் நேற்று சிவ லிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அபூர்வக் காட்சியை காண ஏராளமான பக்தர்கள் அந்தக் கோயிலில் குவிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.