இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மகா சம்ப்ரோக்ஷண நாள்களில் பக்தர்களுக்கு தரிசனம் உண்டா?: தேவஸ்தானம் இன்று முடிவு

திருமலையில் மகாசம்ப்ரோக்ஷண நாள்களில் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் வழங்குவது தொடர்பாக தேவஸ்தானம் தனது முடிவை செவ்வாய்க்கிழமை வெளியிட

News image
Updated On :24 ஜூலை 2018, 2:20 am IST

திருமலையில் மகாசம்ப்ரோக்ஷண நாள்களில் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் வழங்குவது தொடர்பாக தேவஸ்தானம் தனது முடிவை செவ்வாய்க்கிழமை வெளியிடஉள்ளதாகத் தெரிகிறது.
ஏழுமலையானுக்கு வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலுக்குள் பாலாலயம் ஏற்படுத்தும் பணிகள், அஷ்டபந்தனம், கருவறை செப்பனிடும் பணிகள், மகாசாந்தி யாகம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. 
தற்போது ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் 80 ஆயிரத்தை நெருங்குவதால் மகாசம்ப்ரோக்ஷண நாள்களில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவது சாத்தியமில்லை. 
அதனால் தேவஸ்தானம் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6 மணி முதல் 17ஆம் தேதி காலை 6 மணிவரை ஏழுமலையானை தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது.
எனினும், இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் வலுத்ததால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பக்தர்களிடம் கருத்து கேட்டு, அதன்படி நடக்குமாறு தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
அதன்படி ஜூலை 23ஆம் தேதி வரை பக்தர்களிடம் கருத்து கேட்பு நடத்தி, 24ம் தேதி அறங்காவலர் குழுக் கூட்டத்தில் தரிசனம் குறித்து முடிவெடுக்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. 
அதனால் செவ்வாய்க்கிழமை அறங்காவலர் குழுக் கூட்டம் நிறைவு பெற்றவுடன் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவது குறித்த இறுதி முடிவை அதிகாரிகள் வெளியிட உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.