திருமலையில் மகாசம்ப்ரோக்ஷண நாள்களில் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் வழங்குவது தொடர்பாக தேவஸ்தானம் தனது முடிவை செவ்வாய்க்கிழமை வெளியிடஉள்ளதாகத் தெரிகிறது.
ஏழுமலையானுக்கு வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலுக்குள் பாலாலயம் ஏற்படுத்தும் பணிகள், அஷ்டபந்தனம், கருவறை செப்பனிடும் பணிகள், மகாசாந்தி யாகம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
தற்போது ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் 80 ஆயிரத்தை நெருங்குவதால் மகாசம்ப்ரோக்ஷண நாள்களில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவது சாத்தியமில்லை.
அதனால் தேவஸ்தானம் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6 மணி முதல் 17ஆம் தேதி காலை 6 மணிவரை ஏழுமலையானை தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது.
எனினும், இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் வலுத்ததால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பக்தர்களிடம் கருத்து கேட்டு, அதன்படி நடக்குமாறு தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி ஜூலை 23ஆம் தேதி வரை பக்தர்களிடம் கருத்து கேட்பு நடத்தி, 24ம் தேதி அறங்காவலர் குழுக் கூட்டத்தில் தரிசனம் குறித்து முடிவெடுக்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
அதனால் செவ்வாய்க்கிழமை அறங்காவலர் குழுக் கூட்டம் நிறைவு பெற்றவுடன் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவது குறித்த இறுதி முடிவை அதிகாரிகள் வெளியிட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

பாக்யராஜ் மறைவு.. மகளின் திருமண நாள் படங்களை வெளியிட்ட குஷ்புவுக்கு எதிர்ப்பு!!

ஆமீர் கான் முதல் ஜாக்கி ஷெராஃப் வரை... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பாக்யராஜ் படம்!






