மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மகா பைரவர் ருத்ரர் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம்

திருவடிச்சூலம், ஈச்சங்கரணை கிராமம் பைரவர் நகரில் உள்ள மகா பைரவர் ருத்ரர் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேக விழா திங்கள்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

News image
பைரவருக்கு  நடைபெற்ற  ஏகதின  லட்சார்ச்சனை.
Updated On :5 ஜூன் 2018, 8:21 pm

DIN

திருவடிச்சூலம், ஈச்சங்கரணை கிராமம் பைரவர் நகரில் உள்ள மகா பைரவர் ருத்ரர் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேக விழா திங்கள்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலம் சாலை ஈச்சங்கரணை கிராமம், ஸ்ரீ பைரவர் நகரில் எழுந்தருளியுள்ள மகா பைரவர் ருத்ரர் ஆலயத்தில் திங்கள்கிழமை ஏகதின லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழிப்புடன் இயற்கை வளங்கள் பெருகவும் நாட்டுமக்கள் நலனுடன் நோய் நொடியின்றி, நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழவும் உலக ஜீவராசிகளும் சுபிட்சமாக வாழவும் வேண்டி இந்த வழிபாடு ஸ்ரீபைரவர் சித்தாந்தம் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி கணபதி ஹோமம், பைவரர் ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. ஸ்ரீ ஷேத்ர பைரவர் மூலவருக்கும் உற்வசவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், உச்சிக்கால அபிஷேகம் அலங்காரம், சிறப்பு பூஜைகள், மஹா தீபாராதனை நடைபெற்றது.
ஷேத்ர பால பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் ஏகதின லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், திருவடிச்சூலம், திருப்போரூர், சிங்கபெருமாள்கோவில், மகிந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
தங்களது குடும்பம் சகல செல்வங்களுடன் செழிப்பாக இருக்கவும், குடும்பத்தில் உள்ள கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டியும் பூஜையில் கலந்துகொண்டு லட்சார்ச்சனை சங்கல்பம் செய்துகொண்டனர்.
அவர்கள் மஹாபைரவரையும், ஷேத்ர பால பைரவரையும் வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பைரவர் சித்தாந்தம் சுவாமிகள் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள், பணியாளர்கள், பக்தர்கள், ஈச்சரங்கரணை கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.