திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் 5 இடங்களில் அணையா தீபங்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கோயில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. எனவே, பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோயிலில் பக்தர்கள் அதிகம் கூடும் 5 இடங்களில் பெரிய அளவிலான விளக்கு (அணையா தீபம்) வைக்க முடிவு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கோயிலின் 6 இடங்களில் நீர் தும்பிகள் (தீ விபத்து காலங்களில் நீர் வெளியேற்றும் குழாய்) வைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் சில இடங்களில் வெளிப்புறமாகச் செல்லும் மின் வயர்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
இதைத் தடுக்க கோயிலில் தரைவழியே மின் வயர்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.44 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








