பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் 28 நாள்களில் நிறைந்ததையடுத்து, அவை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.3.66 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு பழனி கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால், கோயில் உண்டியல்கள் 28 நாள்களில் நிரம்பின. அதையடுத்து, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இரண்டு நாள் எண்ணிக்கை முடிவில், ரூ.3 கோடியே 66 லட்சத்து 91 ஆயிரத்து 739 கிடைத்துள்ளது. மேலும், பக்தர்கள் உண்டியல்களில் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு உள்ளிட்டவற்றையும், வெள்ளியாலான வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் உள்ளிட்டவற்றையும் செலுத்தியுள்ளனர். இதில், தங்கம் 1,330 கிராமும், வெள்ளி 15,520 கிராமும் கிடைத்துள்ளன.
தொடர்ந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 552 கிடைத்துள்ளன.
உண்டியல் எண்ணும் பணியில் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், மதுரை இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சிவலிங்கம், கண்காணிப்பாளர் முரளி, மேலாளர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் புதிய போஸ்டர்!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் லாக்கர் திறப்பு!

டிமான்டி காலனி - 3 முதல் ஹாய் வரை... ஜீ5 ஓடிடியில் வெளியாகும் படங்கள், இணையத் தொடர்கள்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



