மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜோதிட ரீதியாக விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே உடல் வலுவும் வனப்பும் சிறப்பாக அமைந்திருக்கும்.

News image
Updated On :12 ஜூன் 2018, 10:33 am

தினமணி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே உடல் வலுவும் வனப்பும் சிறப்பாக அமைந்திருக்கும். உடல் உழைப்பிலும் மூளை உழைப்பிலும் அயராமல் செயலாற்றும் இந்த ராசிக்காரர்கள் பிறவியிலேயே சுறுசுறுப்பானவர்கள். 

ஆயினும் இவர்கள் தங்கள் அலட்சியத்தினாலும், உடலாற்றலை விரயமாக்குவதாலும் இவர்களுடைய உடல் நலம் பாதிக்கப்படக்கூடும். ஆவேச உணர்ச்சிகளால் இவர்களுடைய உடல் நலன் பாதிக்கக்கூடும். எனவே, நோய்க்கு இடங்கொடேல் என்ற பழமொழியின்படி, எப்போதும் நோய்வராதவாறு முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

இவர்கள் காய்ச்சல், தலைவலி போன்ற சிறுசிறு நோய்களைப் பொருட்படுத்தாமலேயே வேலை செய்வார்கள். இதனால், சில சமயங்களில் அவையே பெரிய நோய்களாக முற்றும்படி விட்டுவிடுவார்கள். அதன் பிறகே அவற்றைப் பெரிதாக நினைத்துப் பெரிய பெரிய டாக்டர்களைத் தேடியலைந்து வைத்தியம் செய்து கொள்வார்கள். தொற்று நோய்கள் இவர்களை எளிதில் அண்டாது. 

Story image

விருச்சிக ஸ்தானம் மனித உடலில் பெருங்குடல் சிறுநீர்ப்பை பித்த நீர்ப்பை இன உறுப்புகள் ஆகியவற்றை ஆள்வதாகும். விருச்சிக ராசிக்காரர்கள் மேற்சொன்ன உறுப்புகளில் எந்த நோய் வந்தாலும் உடனடியாக சிகிச்சை செய்துகொள்வது அவசியம் நோய்கள் ஏற்படாத போது அந்த உறுப்புகளின் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். 

ஆழ்ந்த சிந்தனையும் தீவிர யோசனையையும் கொண்ட இவர்களுக்கு மூளைக் கொதிப்பும், கணைச்சூடும் உண்டாகும். ரத்தக் கழிச்சல், மூலநோய் போன்றவையால் பாதிப்பு ஏற்படும். ஆயினும் இவர்கள் இரத்தம் விரைவில் செழுமையாகிவிடும் இயல்பை உடையது. எனவே இவர்களில் பெரும்பாலோருக்கு இரத்தசோகை நோய்கள் வருவதில்லை. ஆனால் ஜீரண உறுப்புகள் கோளாறு அடைவதும், சிறுசிறு ரணங்களும் சிராய்ப்புகளும் அடிக்கடி ஏற்படுவதும் சகஜமாக இருக்கும். 

விருச்சிகத்திற்கு ராசியாதிபதி செவ்வாயாகையால், அந்தக்கிரகத்திற்குரிய போர்க்குணம் இவர்களுக்கும் அமைந்திருக்கும். மதுபானப் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் போர்வெறியுடன் சண்டையிடுவது, ரத்தக்காயங்கள் ஏற்படும் அளவுக்கு அடிபிடி சண்டையில் ஈடுபட்டு விடுவார்கள்.

Story image

இவர்கள் நதிக்கரை, கடற்கரையோரங்களில் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடித் தண்ணீரில் நீந்திக் குளிப்பதும் நீராடுவதும் இவர்களுடைய ஆரோக்கியத்திற்கு மிக்க நன்மையைத் தரும். உடலிலிருந்து வியர்வை வெளிவரும் அளவுக்குக் கஷ்டமான வேலைகளைச் செய்வதால் இவர்கள் தசைகள் வலுப்பெறுவதோடு முகத்தில் கவர்ச்சியும் ஏற்படுத்தும். அடிக்கடி உல்லாசப் பயணம், தீர்த்தயாத்திரை சென்று வருவது இவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த ராசிக்காரர்கள் முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, பசலைக்கீரை முதலிய கீரைவகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் உடலின் உள் உறுப்புகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். 

எவ்வளவுதான் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும், உடலுக்கு நோயோ, மனதிற்குத் துன்பமோ வந்தால், உடல் மிகவும் எளிதாகத் தளர்ந்து மனம் விரைந்து சோர்ந்தும்விடும். பொதுவாக இவர்களின் உள்ளம் நன்றாக இருந்தால்தான் உடலும் ஆரோக்கிமாக இருக்க முடியும். அதுவும் குறிப்பாக தாம்பத்திய சேர்க்கையில் இவர்கள் கருதியிருக்கும் சிலவகை உறவுத் தொடர்புகளும் உடல் இயக்கங்களும் இவர்கள் விரும்பிய வகையில் அமையவில்லையென்றால் இவர்களின் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். 

Story image

வலுவான இவர்களுடைய உடலோடும், எதையும் அலசி ஆராய்ந்து பார்த்துத் தெளிவாக அறிந்துகொள்ளும் நெஞ்சத் துணிவோடும் கம்பீரமான அதிகார பாவனையுடைய தோற்றத்துடனும் இவர்கள் முன்னேற முயன்றால் இவர்கள் எத்தகைய பொருளாதார உயர்வையும் ஆராக்கியச் செழிப்பையும் சிறப்பையும் அவற்றின் உன்னத நிலையையும் எளிதாக அடைந்து விடமுடியும். 

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குரிய எளிய வழி வகைகளை ஆராய்ந்து யோகப் பயிற்சியும் தேகப் பயிற்சியும் செய்து வருவார்களானால் நீடித்த ஆயுளுடனும் நிலையான ஆரோக்கியத்துடனும் வாழ்வார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.