சிதம்பரத்தில் பன்னிரு திருமுறை விழா நிறைவு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வந்த 'பன்னிரு திருமுறை விழா' வியாழக்கிழமை நிறைவடைந்தது.


கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வந்த 'பன்னிரு திருமுறை விழா' வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 25-ஆம் தேதி 'பன்னிரு திருமுறை' விழா தொடங்கியது. தினமும் காலை, மாலை சொற்பொழிவுகளும், திருமுறை இசை நிகழ்ச்சிகளும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.
திருமுறையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிறைவு விழாவுக்கு நடராஜ தீட்சிதர் தலைமை வகித்தார். 12-ஆம் திருமுறை குறித்து சாரதா நம்பி ஆரூரன், சாரங்கபாணி ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
தொடர்ந்து கிரிஜா ராமசாமியின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு தொடங்கிய விழாவுக்கு குப்புசாமி தீட்சிதர் தலைமை வகித்தார். நடராஜன், மணியன் ஆகியோர் 12-ஆம் திருமுறை குறித்து சொற்பொழிவாற்றினர். தொடர்ந்து, கீர்த்தனா திருமுறை இன்னிசை நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற நிறைவு விழாவில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுக்கு பொது தீட்சிதர்கள் சார்பில் உ.வெங்கடேச தீட்சிதர் நினைவுப் பரிசை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...