தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தஞ்சாவூர் நிலாவணை மகாதேவர் கோயிலில் மே 13-ல் மகா கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஆனந்தவல்லி...

News image
Updated On :9 மே 2018, 6:58 am

தினமணி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத நிலாவணை மகாதேவர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில். 

சந்திரன் வழிபட்ட ஸ்தலம். முதலாம் குலோத்துங்க சோழ மன்னன் நின்று உருவாக்கி, பின்னாளில் சிதிலமான ஸ்தலம். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்தி ஸ்தலம். கடகராசிக்காரர்களுக்கு பரிகார ஸ்தலம். மகாதேவன். சந்திரசேகரன் என்ற பெயர் கொண்டவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஸ்தலம் இது. 

எல்லாம் வல்ல பரம கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் ஐந்தொழில் புரிந்து இப்பூலகம் காக்கின்றார். அவ்வகையில் உம்பலப்பாடி எனும் இவ்வூரில் ஆனந்தவல்லி சமேத நிலாவணைமகாதேவர் (ஏகாம்பரேஸ்வரர்) எனும் திருநாமம் தாங்கி கோயில் கொண்டுள்ளார். 

மண்ணியாற்றங்கரையில் அமைந்த சிவாலங்களில் முதன்மையான ஸ்தலம். உம்பர்பாடி எனற் பெயரும் இவ்வூருக்கு உண்டு. உம்பர் எனில் தேவர் என்று பொருள். தேவர்கள் வசித்த ஊர் என்ற புகழும் கொண்டது. 

இவ்வூர் சிவன்கோயில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் கோயிலை மற்றிலும் புதிதாக நிர்மாணிக்க கிராம மக்கள் முயற்சியால் திருப்பணிக்கமிட்டி அமைக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் முழு ஒத்துழைப்புடனும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாலயத்தின் மகாகும்பாபிஷேகம் நிகழும் விளம்பி வருடம் சித்திரை மாதம் 30-ம் தேதி (13.05.18) ஞாயிற்றுக்கிழமை திரயதசி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள் அருளாசியுடன் திருப்பணிச் செம்மல் சென்னை திருமதி. மகாலெட்சுமி சுப்பிரமணியம் அவர்களின் முன்னிலையில் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். 

நிகழ்ச்சி நிரல்

11.05.18 காலை 10.00 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம்இ நவக்கிரக ஹோமம், தீபாராதனை

மாலை 3.00-க்கு - அக்னி சங்கீஹரணம், பிரசன்னா அபிஷேகம், புனிதநிர் எடுத்துவருதல், வாஸ்து பூஜை, அங்குரார்ப்பணம், நட்சாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம். 

இரவு 9.00-க்கு யாகசாலை பூஜைகள் ஆரம்பம்
====
12.05.18 - காலை 9.00 மணிக்கு விசேஷசந்தி, யாகசாலை பிரவேசம், இரண்டாம்கால யாகபூஜைகள் ஆரம்பம்

மாலை 5.00-க்கு விசேஷ சந்தியுடன் மூன்றாம் கால யாகபூஜைகள் ஆரம்பம்

இரவு 7.00-க்கு பிரம்மசாரி பூஜை, தம்பதி பூஜை, வடுகபூஜை, சுகாசினி பூஜையுடன் ராகம் தாளங்களுடன் மூன்றாம் கால யாக பூஜையுடன் பூங்ரணாஹூதி தீபாராதனை
====
13.05.18 - காலை 8.00-க்கு ஸ்பர்ஷாஹுதி, திரவிய ஹோமங்கள், மகாபூர்ணாஹுதி, மகாதீபாராதனை

காலை 9.30 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் கடங்கள் புறப்பாடு

10.00 மணிக்கு மேல் திரயோதசி திதி ரேவதி நட்சத்திரம் கூடிய அமிர்தயோகம் மிதுன லக்னத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறும்க. 

இரவு 8.00 மணிக்கு சுவாமி வீதியுலா காட்சி நடைபெறும்.

பக்த மெய்யன்பர்கள் கலந்துகொண்டு தரிசித்து சிவனருள் பெற வேண்டுகிறோம். 

தகவல் - எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.