இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா: நவ. 8-இல் தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் 8ஆம் தேதி (வியாழக்கிழமை) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. சூரசம்ஹாரம் நவ.13ஆம் தேதி

News image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சஷ்டி மண்டபம் முன்பு நடைபெற்ற பந்தல் அமைக்கும் பணி.

Updated On :6 நவம்பர் 2018, 12:46 am IST


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் 8ஆம் தேதி (வியாழக்கிழமை) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. சூரசம்ஹாரம் நவ.13ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நிகழாண்டில் வியாழக்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சி, தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுகிறது.
சஷ்டி 2ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.
நவம்பர் 13ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹார விழாவை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் ஒரு மணிக்கு சாயராட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நவம்பர் 14ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தவசுக் காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
திருவிழா நாள்களில் நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் திருக்கோயில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் வைத்து பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.
பந்தல் அமைக்கும் பணி: கந்த சஷ்டி விழாவுக்கு வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக கழிப்பறையுடன்கூடிய தற்காலிக பந்தல்களும், கிரிப்பிரகாரத்தில் தகரத்தாலான தற்காலிக பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், கந்த சஷ்டி மண்டபத்தில் தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டு, அவை அலங்கரிக்கப்பட்டுள்ளன. திருக்கோயில் முன்புறம் மற்றும் ராஜகோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.