குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தாமிரவருணி மகா புஷ்கரம்: விழிப்புணர்வு ரத யாத்திரை தொடக்கம்

தாமிரவருணி புஷ்கரம் தொடர்பான விழிப்புணர்வு ரத யாத்திரையை காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

News image

புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரையைத் தொடங்கி வைத்த விஜயேந்திரர். உடன் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர்

Updated On :9 அக்டோபர் 2018, 2:37 am IST

தாமிரவருணி புஷ்கரம் தொடர்பான விழிப்புணர்வு ரத யாத்திரையை காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம், தாமிரவருணி ஆற்றில் நடைபெறவுள்ள மகா புஷ்கர விழாவையொட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு ரத யாத்திரை காஞ்சிபுரத்தில் தொடங்கியது. இதனை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டார். 
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கனமழை காரணமாக சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மழை நேரத்தில் தேர்தலை நடத்தினாலும், எதிர்க்கட்சியினர் குறை கூறுவது வழக்கமானது என்றார்.
அதைத் தொடர்ந்து, பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் முன்னிலையில் திரளானோர் ஓம் எனும் வார்த்தை பொறிக்கப்பட்ட கொடியை ஏந்தியபடி சென்றனர். அவ்வாறு ரத யாத்திரைக்கு முன்பு கொடியை ஏந்தி செல்லக் கூடாது என போலீஸார் கூறி, தடுத்து நிறுத்தினர்.
சிறிது நேர வாக்குவாதத்துக்குப் பிறகு, விழிப்புணர்வு ரதம் புறப்பட்டுச் சென்றது. 
இதுகுறித்து கே.டி.ராகவன் கூறுகையில், போலீஸார் உள்நோக்கத்துடன் எங்களைத் தடுக்க முயற்சித்தனர். பாஜக தலைமை எடுக்கும் முடிவின்படி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். டி.டி.வி.தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் இடையிலான கருத்துகள் முரண்பாடாக உள்ளன. அது குறித்து கருத்து கூற இயலாது என்றார். 
இந்நிகழ்ச்சியில், பாஜக மாவட்டத் தலைவர் செந்தமிழரசு, கோட்டப் பொறுப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட திரளான பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.