நவராத்திரியில் வணங்க வேண்டிய அன்னையும், நிவேதனமும்
நவராத்திரியில் நாம் ஒன்பது நாட்களும் எந்தெந்த அன்னையை வணங்க வேண்டும்.


நவராத்திரியில் நாம் ஒன்பது நாட்களும் எந்தெந்த அன்னையை வணங்க வேண்டும். நிவேதனமாக என்ன படைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
முதலாம் நாள்: சாமுண்டியாகக் கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபம் கொண்ட அன்னை. நீதியைக் காக்கவே கோபமாகக் காட்சியளிக்கிறாள்.
நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல்.
இரண்டாம் நாள்: அன்னையை வாராஹி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
நிவேதனம் : தயிர்ச்சாதம்.
மூன்றாம் நாள்: சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்ரி, சாம்ராஜ்யதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி. பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.
நிவேதனம்: வெண்பொங்கல்.
நான்காம் நாள்: அன்னையை வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். இவள் தீயவற்றை சம்ஹரிப்பவள்.
நிவேதனம் : எலுமிச்சை சாதம்.
ஐந்தாம் நாள்: அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். இவள் சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். க டின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
நிவேதனம் : புளியோதரை.
ஆறாம் நாள்: அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். இவள் தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்குபவள். வீரத்தைத் தருபவள்.
நிவேதனம் : தேங்காய் சாதம்.
ஏழாம் நாள்: அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும். இவள் விஷ்ணு பத்தினி. தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.
நிவேதனம் : கற்கண்டு சாதம்.
எட்டாம் நாள்: அன்னையை நரசிம்ஹியாக வழிபடவேண்டும். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.
நிவேதனம் : சர்க்கரைப் பொங்கல்.
ஒன்பதாம் நாள்: அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். இவள் வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியம்.
நிவேதனம் : சுண்டல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...