சென்னையில் நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பார்க்கத் தயாராகுங்கள்..

ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி (நாளை)..
சென்னையில் நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பார்க்கத் தயாராகுங்கள்..
Published on
Updated on
1 min read

ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி (நாளை) சென்னையில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலையும், 200 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருட சேவைக்காகப் பாரம்பரியமாக திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்படும். 

ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை உபய உற்சவ ஊர்வலம் செப்டம்பர் 11(நாளை) காலை 10.31 மணிக்கு பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் புறப்படவுள்ளது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்த ஊர்வலம் என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் கொட்டகை, செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம் காசி விஸ்வநாதர் கோயில் சென்றடைந்து இரவு தங்கும்.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 12-ம் தேதி, ஐசிஎஃப், ஜிகேஎம் காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து அங்கு இரவு தங்கும். 

செப்டம்பர் 13-ம் தேதி பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்கும். 

செப்டம்பர் 14-ம் தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர், வீரராகவப் பெருமாள் கோயில் சென்றடைந்து இரவு தங்கும். 

தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து செப்டம்பர் 16-ம் தேதி திருமலை செல்கிறது.

அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம், மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகளிடம் பிற்பகல் 3 மணிக்கு திருக்குடை முறையாக சமர்ப்பணம் செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com