மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மகாளய பட்சத்தில் வரும் 15 திதிகளிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்!

மகாளய பட்சம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. புரட்டாசி மாதத்துப் பௌர்ணமியிலிருந்து ஐப்பசி...

News image
Updated On :26 செப்டம்பர் 2018, 12:20 pm

மகாளய பட்சம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. புரட்டாசி மாதத்துப் பௌர்ணமியிலிருந்து ஐப்பசி மாதத்து அமாவாசை வரை வரும் 15 நாட்கள் மகாளய பட்சம் என்பர். 

மகாளய பட்சத்தில் ஒவ்வொரு திதிகளிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம். 

மகாளயபட்ச தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்

பிரதமை - பணம் சேரும்

துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்

திரிதியை - நினைத்தது நிறைவேறுதல் 

சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்

பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்

சஷ்டி - புகழ் கிடைத்தல்

சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்

அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்

நவமி - சிறந்த வாழ்க்கைத்துறை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்

தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்

ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி

துவாதசி - தங்கநகை சேர்தல்

திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான 

வேலை அல்லது தொழில்

சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை

மகாளய அமாவாசை - இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்தால் முன்சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.