திருச்சி திருவானைக்கா கோயிலில் இரண்டாம் கட்ட மகா கும்பாபிஷேகம்: தமிழக ஆளுநர், அமைச்சர்கள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சம்புகேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் கட்ட மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
திருச்சி திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.


திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சம்புகேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் கட்ட மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர், அமைச்சர்கள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமி, மடாதிபதிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்த்தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு இரு கட்டங்களாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. 
இதையடுத்து டிச.9 ஆம் தேதி அனைத்து பரிவார விமானங்கள், பரிவார மூர்த்திகள் உள்பட 45 கோபுரங்களுக்கு முதல்கட்டமாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்றிரவே 2 ஆவது கட்ட கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கோயிலின் கிழக்குவாசல் பகுதியில் உள்ள சுந்தரபாண்டியன் கோபுரம் அருகே 7 வேதிகைகள், 23 குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
இரண்டாம் கட்டமாக...: இந்நிலையில், ராஜகோபுரங்களுக்கான 2 ஆவது கட்ட மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வாணவேடிக்கைள், மேளதாளங்கள் முழங்க யாகசாலையிலிருந்து புனித நீர்க்குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து ராஜகோபுரங்களை அடைந்தனர்.பிறகு, சுவாமி, அம்மன் சன்னதிகளில் உள்ள மூலஸ்தான கோபுரத்தில் தங்கக் கலசத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். இதையடுத்து அனைத்து ராஜகோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 
ஆளுநர், அமைச்சர்கள் பங்கேற்பு: விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் ஜெயப்பிரியா(திருவானைக்கா)வெங்கடேசன்(வெக்காளியம்மன் கோயில்) சென்னையை சேர்ந்த மகாலட்சுமி சுப்பிரமணியம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மடாதிபதிகள்: கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேசுவர சுவாமிகள், சென்னை அம்பத்தூர் யோகமயா ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் பரத்வாஜ் சுவாமிகள், தருமை ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் கட்டளை சாமிநாத தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கும்பாபிஷேகத்தை காண திருவானைக்கா கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள், சிவனடியார்கள் குவிந்திருந்தனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் 2,000 மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருச்சி திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் சுவாமி சன்னதி மூலஸ்தானம் தங்க கலசத்துக்கு புனிதநீர் ஊற்றுகிறார் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com