மேற்கு முகப்பேர் கனகதுர்க்கா கோயிலில் ஆக.3-ல் ஆடிப்பூர பாலாபிஷேகம்

மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா திருக்கோயிலில் ஆடிப்பூர பாலாபிஷேகம் ஆகஸ்ட் 3-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. 
மேற்கு முகப்பேர் கனகதுர்க்கா கோயிலில் ஆக.3-ல் ஆடிப்பூர பாலாபிஷேகம்

சென்னை, மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா திருக்கோயிலில் ஆடிப்பூர பாலாபிஷேகம் ஆகஸ்ட் 3-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. 

பூலோக வைகுந்த கைலாயம் என்றழைக்கப்படும் ஸ்ரீ கனகதுர்க்கா திருக்கோயிலில் வருடத்தில் ஒருநாள் ஆடிப்பூரத்தன்று பாலாபிஷேகம் சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஆகஸ்ட் 03, சனிக்கிழமை அன்று பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த பாலாபிஷேகத்தில் சுமங்கலிகளும், கன்னிப் பெண்களும், ஆண்களும் மூலஸ்தானத்திற்குள் நேரடியாகச் சென்று அம்பாளுக்கு பாலாபிஷேகம்  செய்யலாம்.

இத்திருத்தலத்தில் அம்பாள் எட்டரை அடிக்கு மேல் உயரமாக இருப்பதால் பக்தர்கள் அம்பாள் சிரசில் பால் ஊற்றிட விசேஷ ஏணிப்படி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ரூ.100 நன்கொடை தருபவர்களுக்குச் சிறப்பு வழியில் பாலாபிஷேகம் செய்யலாம். 

பாலாபிஷேகம் காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும். பால் எடுத்துக்கொண்டு மூலஸ்தானத்திற்குள் செல்பவர்களுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது. 

பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்கலாம். மாலை 5.00 மணிக்கு அம்பாளுக்கு வளையல் காப்பு  அலங்காரம் நடைபெற்று, மாலை 6.00 மணிக்கு மேல் அனைவருக்கும் வளையல் வழங்குவார்கள்.

அகத்தியரும் தர்மபத்தினி லோபமுத்ராவும் தம்பதியராக துர்க்கைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வரங்கள் பெற்றதாக சிவபுராணம் கூறுகிறது. அதனால், தம்பதிகளாக  துர்க்கைக்கு 7 விதமான சர்வாபிஷேகம் செய்துவந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஆனால், இதற்கும் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். அன்றைய  தினம் அதிகாலை 4.00 மணி முதல் முன்பதிவு தொடங்கும். இதற்கான கட்டணம் ரூ.1200/- மட்டுமே. 

வளையல் காப்பு அலங்காரம் செய்வதற்கு பக்தர்கள் வளையல்கள் வாங்கி தரலாம்.

கோயில் வாட்ஸ்அப் எண்: 9444777811

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com