திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்
2-ஆம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனத்தில் உற்சவமூர்த்திகள் வலம் வந்தனர்.
திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை சின்ன சேஷ வாகனத்தில் பண்டரிபுரம் பாண்டுரங்கர் வேடத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின் மதியம் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தி, அர்ச்சகர்கள் நைவேத்தியம் சமர்பித்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு அன்னப் பறவை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி அவதாரத்தில் கையில் வீணை ஏந்தி வலம் வந்தார்.
இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வாகனச் சேவைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். வாகனச்
சேவைக்கு முன் இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


