நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அத்திவரதரை கருவறையில் வைத்து வழிபட்டால் நாடு வளம்பெறும்: மைலம்பாடி ஜீயர்

அத்திவரதரை மீண்டும் ஜலவாசத்தில் வைக்காமல் வரதராஜ பெருமாள் கோயில் கருவறையில்

News image
Updated On :27 ஜூலை 2019, 4:04 pm IST


அத்திவரதரை மீண்டும் ஜலவாசத்தில் வைக்காமல் வரதராஜ பெருமாள் கோயில் கருவறையில் வைத்து வழிபட வேண்டும் என மைலம்பாடி சுதர்சன மடம் ஜீயர் ஸ்ரீ நம்பி ராமானுஜர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைலம்பாடியில் பழமை வாய்ந்த சுதர்சன மடம் அமைந்துள்ளது. அந்த மடத்தில் உள்ள ஜீயர் அத்திவரதர் குறித்து கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 

வரதராஜ பெருமாள் பரமபதம் பாற்கடல் ராமானுஜர் என பல்வேறு அவதாரங்கள் புரிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வந்தார். அவர் 40 ஆண்டுகளுக்குப் பின் ஜலவாசத்திலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க பூலோகம் வந்துள்ளார். அவர் எழுந்தருளிய பின்னர் தான் நாட்டில் நல்ல மழை பெய்கிறது. 

காஞ்சியில் தற்போது அருள்பாலிக்கும் அத்தி வரதராஜ பெருமாளை காஞ்சி திருக்கோயில் கருவறையில் வைத்து வழிபட்டால் நாடு வளம்பெறும். எனவே, 48 நாட்கள் பூஜைக்குப் பின் அத்திவரதரை கருவறையில் வைத்து வழிபட வேண்டும் இதனால் அனைத்து தரப்பு பக்தர்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அத்திவரதரை தரிசிக்கும் பேறு கிடைக்கும். 

இதற்கு ஆன்மிக சான்றோர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.