ஆனி மாத பூஜைகளுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜைகள் மற்றும் தமிழ் மாதாந்திர பூஜைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 5.00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றவுள்ளார். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் நாளை அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம் நடைபெறும்.
தொடர்ந்து சகஸ்ர கலச பூஜையும் நடைபெறும். இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அன்றிரவு 10.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்படும் உதயநிதி!

இந்திய அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் நியமனம்..! யார் இந்த சுபதீப் கோஷ்?

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 95.40 ஆக நிறைவு!

வெற்றி விழாவில் நன்றி சொல்கிறேன்... உதயநிதி கைதானதைக் குறிப்பிட்டு பேசிய மாதவன்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



