தனுசு ராசிக்கு சனி வக்ர பலன்கள் சூப்பரா? சுமாரா? 

விகாரி ஆண்டில் சனி பகவான் தனுசு ராசியில் சித்திரை 24(மே 7-ம்) தேதி வக்ர கதியிலிருந்து ஆவணி
தனுசு ராசிக்கு சனி வக்ர பலன்கள் சூப்பரா? சுமாரா? 
Published on
Updated on
2 min read

விகாரி ஆண்டில் சனி பகவான் தனுசு ராசியில் சித்திரை 24(மே 7-ம்) தேதி வக்ர கதியிலிருந்து ஆவணி 16(செப்டம்பர் 2-ம்) தேதி வக்ர நிவர்த்தியடைந்து நேர்கதியில் செல்கிறார். 

முதலில் வக்ரம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். வக்ரம் என்பது முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு கிரகம் பின்னோக்கி வருவதற்குப் பெயர் தான் வக்ரம் என்கிறோம். 

(உடல் உபாதை, தொழிலில் பிரச்னை, குடும்ப பிரச்னை, கணவன் மனைவிக்குள் பிரிவு) என தனுசு ராசிக்காரர்கள் பல இன்னல்களைச் சந்தித்து வந்தனர். சிலர் நான் என்ன தப்பு செய்தேன்? யாருக்கு என்ன துரோகம் செய்தேன்? எப்போதான் எனக்கு விடிவு காலம் வரும்? என்கிற அளவுக்குப் பாதகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள். 

ஏற்கெனவே, தனுசு ராசிக்கு ஏழரைச் சனி நடைபெற்று வருகிறது. இதுல புதுசா சனி வக்ரம் வேற.. வக்ரமடையும் சனி மேலும் கஷ்ட நஷ்டங்களைக் கொடுத்துவிடுவாரோ என்ற பயம் மென்மேலும் அதிகரித்துள்ளது.

தற்போது வக்கிரமடைந்திருக்கும் சனி யோகத்திற்குட்பட்டவராக வக்ரமடைகிறார். சனி பகவான் பூராடாம் 4-ம் பாதத்தில் வக்ரமடைந்து, தொடர்ந்து 142 நாட்கள் வக்ர கதியிலிருந்து பூராடம் 2-ம் பாதத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். 

தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். சனியும் - குருவும் பரஸ்பர நட்பு கிரகங்கள். பூராட நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். சனி - சுக்கிரன் நட்பு கிரகங்கள். அதன்படி, ராசி அதிபதி வகையிலும், நட்சத்திர அதிபதி வகையிலும் எந்த தோஷமும் இல்லை. இந்த சனி வக்ரம் தனுசு ராசிக்கு அனுகூல பலனைகளையே கொடுக்கப்போகிறது. 

ஜென்ம சனி நடைபெற்று வருவதால் சனி நல்லதைச் செய்யமாட்டார். ஆனால், தற்போது சனி வக்ரமடைவதால் கெடு பலன்களைச் செய்யாமல் ஒதுங்கிச் செல்வார். இதனால் நமக்கு எல்லா விஷயத்திலும் சற்று ஆறுதல் கிடைக்கப்போகிறது. 

இதற்கு முன்னாடி இருந்துவந்த சிரமங்கள் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்துவருவதை நீங்களே உணர்வீர்கள். தனுசு ராசிக்கு இந்த சனி வக்ரம் அடுத்த 4 மாதத்திற்கு நல்ல பலனைகளையே கொடுக்கும். ஏன்? அதற்கு அப்பரம் கஷ்டத்தைக் கொடுக்குமா என்றால்... இல்லை! காரணம் அதன்பிறகு குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. அதிசார குருவால் தனுசு ராசிக்கு நன்மையைத் தருமே தவிர ஜென்ம சனியால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 

நல்ல மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம். தனுசு ராசிக்காரர்களின் நம்பிக்கை வீண் போகாது. இந்த வக்ர சனி நன்மையை மட்டும் தான் செய்யும். நம்புவோம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com