மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்களுக்கு இது தெரியுமா?

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் நெகிழிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென

News image

சபரிமலை ஐயப்பன் கோயில்

Updated On :24 அக்டோபர் 2019, 6:02 am


தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் நெகிழிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென இந்து சமய அறநிலையத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷு, மகர சங்கராந்தி, கார்த்திகை மாதம் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஐயப்பன் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, துறையின் ஆணையர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட வேண்டுகோள்..

கேரள மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும்போது நிலக்கல் அல்லது எருமேலி பகுதிகளுக்கு எந்தவகையான நெகிழிப் பொருள்களை கொண்டு செல்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆகவே, வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் தொடங்கவுள்ள நடை திறப்பு காலத்தின்போது ஐயப்பப் பக்தர்கள் நெகிழிப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் நெகிழிகளைக் கொண்டு செல்வதை முற்றிலுமாக தவிர்க்கும் வகையிலும், நெகிழி தடை குறித்தும்,  பம்பையில் பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளை களைந்து நதியில் விடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. 

இதற்காக தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையாளர்கள் மூலம் ஐயப்ப குருசாமிகளை இணைத்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தனது வேண்டுகோள் செய்தியில் ஆணையாளர் பணீந்திரரெட்டி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.