மின்சாரம் பாயும் நாமம்.. ஸ்ரீ ராம நாமம்!

விஷ்ணு அவதாரத்தில் சிறந்தது ராம அவதாரம் என்பது உண்மை. மகா பெரியவா கூறுவது..
மின்சாரம் பாயும் நாமம்.. ஸ்ரீ ராம நாமம்!

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே "ராம" என்ற இரண்டு எழுத்தினால்.

கம்பராமாயணம் -14

விஷ்ணு அவதாரத்தில் சிறந்தது ராம அவதாரம் என்பது உண்மை. மகா பெரியவா கூறுவது ராமன் என்றாலே இன்பத்தைத் தருபவன் என்று அர்த்தம் அவர் எந்தவித  துன்பத்திலும் ஆனந்தமாக இருப்பார். ஸ்ரீராமரைவிட ராம நாமம் பெரிதாகக் கருதப்படுகிறது எப்படி என்று பார்ப்போம். 

ராம நாமத்தை மூன்று முறை ஆழ்ந்த பக்தியுடன் ஜபித்தால் அவர்களுக்கு அனைத்து விடி மோட்சமும் உண்டு. சிவபெருமான் என்ன சொல்கிறார் தெரியுமா? எல்லா  வார்த்தைகளையும் விட ராம நாம ஜபம் தான் மிகவும் இனிமையானது. அவர் பெயரைச் சொல்வது விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைச் சொல்வதற்குச் சமம் என்று  கூறுகிறார். இராம நாமம் தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மூல மந்திரம் என்று கம்பனால் புகழப்படுகிறது. இந்த நாமத்தை ஜெபிப்பவரால் உடலில் மின்சார சக்தி  பாய்ந்து இன்பத்தைக் கொடுக்கும்.

எங்கேயெல்லாம் ராம நாமம் ஒலித்ததது என்று பார்ப்போம்..

நம் பாரத தந்தை காந்தி தாத்தா நினைத்துக்கூட பார்க்கமுடியாத நேரத்தில் உயிர் இழந்த போது அவர் கூறிய கடைசி வார்த்தை "ஹே ராம்!". மஹாத்மா எப்பொழுதும் ராம  நாமத்தை ஜபித்ததால் தான் அவர் இறக்கும் தறுவாயில் ராமரின் நாமம் நினைவுக்கு வந்தது அந்தக்கட்டத்திலும் அவர் வாயில் ராம நாமம் உச்சரிக்கமுடிந்தது. இன்றும்  அவருக்கு பிடித்த பாடல்கள் நம் காதில் ஒலிக்கிறது.

ரகுபதி ராகவ ராஜாராம் ! பதீத பாவன சீதாராம் !

சீதாராம் ஜெய சீதாராம் ! பஜ ப்யாரே து சீதாராம் !

ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் !

ரகுபதி ராகவ ராஜா ராம் ! பதீத பாவன சீதாராம் !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !

ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாக பிரம்மம் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர். இவர் தந்தை ராமபிரம்மம்  மிகப்பெரிய ராமரின் பரம பக்தர் ஆவர். ஜோதிட முறையில் (DNA Astro) தந்தை வழியாக தியாகராஜருக்கு ராமரின் உச்சரிப்பு அவர் சரீரத்துக்குள் வந்தது விட்டது. இவர்  இளமையிலேயே ஸ்ரீராமர் விக்கிரகங்களை வைத்துப் பூஜை செய்து மற்றும் அவர் நாமத்தை உச்சரிப்பதுமாய் வாழ்ந்து வந்தார். பின்பு இராமகிருஷ்ண யதீந்திரர் என்ற மகான்  வந்து இராம நாமத்தை 96 கோடி முறை ஜெபிக்கும் படி தியாகராஜரிடம் கூறிச் சென்றார். அவர் சொன்னதை தெய்வ வாக்காக எடுத்து அப்புனித சொல்லை 21 ஆண்டுகளில்  96 கோடி முறை அவர் ராம நாமம் சொல்லி முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 125,000 முறை இராமநாமத்தைச் ஜபித்ததாகவும் பலமுறை ராம தரிசனத்தைப்  பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்து முறைப்படி நாம் செய்யும் தர்ப்பண மந்திரத்தாலும் ராமனின் பெயரை உச்சரித்து நாம் செய்த பாவத்தை ஸ்ரீ ராம நாம மந்திரம் மூலமாக கழிந்து பரிசுத்தமாக்கப்படுவான் என்று வேத சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:

மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்

ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:

ஸ்ரீ ராம ராம ராம

எல்லா சஹஸ்ர நாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் விஷ்ணு சஹஸ்ர நாமம் என்று கூறப்படுகிறது. "ராம நாமத்தை மூன்று முறை ஆழ்ந்த பக்தியுடன்  ஜபித்தால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தை அல்லது கடவுளின் விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை படித்த பலன் கிடைக்கும். எப்படி “மூன்று முறை சொன்னால் எப்படி  ஆயிரத்திற்குச் சமமாகும்” என்று கேட்கலாம். 

ராமா என்ற இரண்டு சமஸ்கிருத வார்த்தைகள் அதற்கு அர்த்தம் கொடுக்கிறது. அவை ''ரா' என்பதற்கு சமஸ்கிருதத்தில் இரண்டாவது இடையின எழுத்தும் மற்றும் ‘மா’ என்பதற்கு ஐந்தாவது மெல்லின எழுத்தும் உண்டு. ஒருமுறை ராமா என்ற வார்த்தைக்கு இரண்டு மதிப்பும் × ஐந்து மதிப்பும் = பத்தாகிவிடும். பின்பு மூன்று முறை சொல்லும்பொழுது 10 x 10 x 10 = 1000 நாமத்துக்குச் சமம். தினமும் மூன்று தடவை ராம நாமத்தை ஜபிப்பதும் மிக சுலபம். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவ பெருமானே ராமன் புகழ் பாடும் ஒரு பலஸ்ருதி ஸ்லோகம் வருகிறது. 

இந்த ஸ்லோகத்தைப் படித்தால் சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு என்பது சிவபெருமானின் சூட்சம கூற்று..

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

வால்மீகி இராமாயணம் என்கிற காவியத்தை எழுதுமளவுக்குப் புலமை பெற்றதே "ராம" என்ற நாமத்தை ஜபித்ததால் தான். இங்கும் ஆஞ்சநேயர் ராம நாமத்தை ஜெபித்து  எவ்வாறு வெற்றி வாகை சுட்டுகிறார் என்பது இந்த காவியத்தில் விளக்கப்பட்டுள்ளது. நாம் செய்யும் அதாவது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடி பொடியாக்கும்  இந்த நாமாவளி. ஸ்ரீராமன் கையினால் மரணம் சம்பவித்தால் அவர்களுக்கு நேரடி மோட்சம்தான் சூட்சகமாக உணர்த்துகிறது இந்த ராமாயணம். அதேபோல் மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்பொழுது "ராம" நாமத்தை மட்டும் உயர்வானது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். 

இராம நாமத்தைச் சொல்லாதவன் எல்லாம் இருந்தும் இல்லாதவனாகக் கருதப்படுகிறது. ராம என்கிற இரண்டெழுத்தின் மந்திரத்தில் ஜபித்து முன்ஜென்ம பாவத்தில்  விடுபட்டு, எல்லாவித செல்வதை அடைந்து, தர்மத்தில் உயர்வு பெற்று, முக்தி என்ற ராமர் பாதம் அடைய ராம நாமம் ஜெபிப்போம். இந்த ராம நாமத்தை எப்பொழுதும்  ஜபிக்கலாம் எந்த ஒரு விபத்தும் தீமையும் நடைபெறாது என்பது என் தந்தை எனக்கு சொன்ன உபதேசம்.

குருவே சரணம் 

- ஜோதிட சிரோன்மணி தேவி
தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com