ஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - கடக லக்னம் (பகுதி 4)

ஜாதகத்தில் அடிப்படை வேர் - மிதுன லக்கின (28.8.2019) தொடர்ச்சியாக இன்று வானமண்டலத்தில் 4-வது கட்டமான கடக லக்கினம் பற்றி பார்ப்போம். 
ஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - கடக லக்னம் (பகுதி 4)

ஜாதகத்தில் அடிப்படை வேர் - மிதுன லக்கின (28.8.2019) தொடர்ச்சியாக இன்று வானமண்டலத்தில் 4-வது கட்டமான கடக லக்கினம் பற்றி பார்ப்போம். 

இந்த வீட்டின் அதிபதி பாசத்திற்கு அடையாளமானவனாகவும், மனதை ஆட்டிப்படைப்பவனான சந்திரன் பகவான் ஆட்சிபுரிகிறார். ஒரு மாதத்திற்குள் சந்திரன் மட்டும்தான் அதிவேககமாக 27 நட்சத்திரங்கள் கூடிய 12 ராசி கட்டத்தின் மேல் பயணிப்பர். இவர் வானில் நட்சத்திரங்களாக வலம் வருகின்ற தட்சனின் 27 மகள்களும் சந்திரன் மேல் காதல் வயப்பட்டவர்கள்.

சூரியனை சிவன் என்றும் சந்திரனை பார்வதி என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அதனால் தான் காலபுருஷ தத்துவப்படி சந்திரனுக்கு அருகில் சூரியன் வரிசைப்படி அமர்ந்துள்ளார். சூரியன் எங்கு உச்சமாகிறாரோ (மேஷத்தில்), சந்திரன் அவரருகிலே ரிஷபத்தில் உச்சமாகிறார். மாதுர்காரகன் சந்திரன் என்பவர் உறவு என்றால் தாய், மாமியார் மற்றும் வீட்டில் உள்ள தலைவி அதாவது பெண் தத்துவத்தை கொண்டது இந்த லக்கினம். 

கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு

கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி

வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து

வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே

சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க

சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு

கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா

கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே       

- புலிப்பாணி (25 பாடல்)  

புலிப்பாணி தன் விளக்கத்தில் கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி (சு) என விளம்பும் சுக்கிராச்சாரியார் மிகுதியான தீய பலன்களைத் தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரசித்தும் இக்சுக்ராசாரியினால் வகைதொகையாய் மாண்டதையும் அறிவாயன்றோ? ஆயினும் ஒரு சூட்சமாக - இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோணங்களில் நின்றால் சிவபரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது. இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது காலபுருஷ தத்துவப்படி கடக லக்னம் 91 -120 பாகையில் அமையும். 

கடக லக்னத்தை முக்கியமான ஹீரோக்கள் மற்றும் உதவக்கூறியவர்கள் சந்திரன், செவ்வாய், குரு ஆவார். இதில் வளர்பிறை சந்திரன் சுபத்துவம் மிக்கவர். இந்த லக்கின ஆட்சியதிபதி சந்திரன் ஒரு ஆதிபத்தியம் மட்டும் கொண்டவர். சூரியன் நட்புடன் 2-க்குரியவராகவும் தனம், வாக்கு தன்மையும் மற்றும் நேத்ரம் தொடர்பான வேலைகளை செய்வார். இந்த லக்கினத்துக்கு 3,12 ஆதிபத்தியம் பெற்ற புதன் தைரியத்திற்குரியவராகவும், விரயாதிபதியாகவும் செயல்படுவார்.

சுக்கிரன் 4,11-கும் உரியவர். சுகத்தையும் லாபதிபதியாகவும் செயல்படுவர் இருந்தாலும் சுக்கிரன் தன் தசா புத்திக்காலங்களில் பாதகத்தை செய்வார். செவ்வாய் 5,10-க்கும் உரிய இவர் பூர்வ புண்ணியம் கர்மகாரகனாகவும் இருப்பார். இந்த இடத்தில் செவ்வாய் ஒரு கேந்திரதிபதியாகவும் ஓரும் திரிகோணாதிபதியாகவும் இருந்து ராஜ யோகாதிபதியாகவும் செயல்படுவார். ஆனால், இங்கு அதே செவ்வாய் 28ºயில் நீச்சம் பெற்று அந்த யோகத்தை அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப கூட்டியோ அல்லது குறைத்து சூட்சமாக செயல்படுவார். 

இந்த கடக லக்கினகாரர்களுக்கு குரு ஆறுக்கும் ஒன்பதுக்கு உரிய வேலையான நோய், கடன், மற்றும் பாக்கியத்தை தருபவர். அவரே அதாவது குருவானவர் கடகத்தில் 5º யில் உச்சம் பெறுகிறார். சனியானவர் இவருக்கு களத்திரகாரனாகவும், அஷ்டமாதிபதியாகவும் செய்லபடுவார். இங்கு புதன், சனி, ராகு, கேது பகைவர்களே, இருந்தாலும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப மாறுபடும். கடக லக்கின ஜாதகருக்கு சனி புதன் சுக்கிரன் தசா புத்திக்காலங்களில் மாரகத்திற்கு சமமான பாதகத்தை தருவார்கள் என்று நூற்களில் குறிப்பிட்டுள்ளது. சிலருக்கு உடலில் ஜலத்தால் ஏற்படும் நோய்கள் தாக்கும்.

கடகத்தின் சின்னம் நண்டு: நண்டின் தன்மை அது தன் எல்லா குட்டிகளை அரவணைத்துப் போல இந்த கடக லக்கின ஜாதகர்கள் அதிக மோசக்காரர்கள் மற்றும் அன்பால் அரவணைப்பவர்கள். அதனால் தான் காலபுருஷபடி நான்காம் பாவமான பாசமிக்க தாயின் ஸ்தானம் ஆகும். "நண்டானுக்கு இடம் கொடேல்’ என்றொரு பழமொழிக்கு ஏற்ப இந்த லக்கின காரர்களை மெல்லத் தன்னை நுழைத்துக்கொண்டு, முழுவதுமாக ஆக்கிரமிக்கும் கெட்டிக்காரர்கள். அடுத்த பழமொழியாக ‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்பார்கள். நீங்கள் வளர வளர இடம்பெயர்ந்து கொண்டே இருப்பீர்கள். தன் திறமைக்கு ஏற்ப வெவ்வேறு வேலைகளை கற்று மாறிக்கொண்டு இருப்பார்கள்.

இந்த லக்கினகாரர்களை ஒரு ஆதிபத்தியம் மட்டும் கொண்டவர்; சூரியன் சம பங்கு வேலை செய்பவர், இவரே 2-க்குரியவராகவும் வாக்கு தன்மையும் மற்றும் நேத்ரம் தொடர்பான வேலைகளை செய்வார்; 3,12 பாவத்துக்குரிய புதன் தைரியத்திற்குரியவராகவும் விரயாதிபதியாகவும் ஆதிபத்தியம் பெற்றுள்ளார். சுக்கிரன் 4,11 கூறியவர் சுகத்தையும் லாபதிபதியாகவும் செயல்படுவர் இருந்தாலும் சுக்கிரன் தன் தசா புத்திக்காலங்களில் பாதகத்தை செய்வார்.

செவ்வாய் 5,10-க்கும் உரிய இவர் பூர்வ புண்ணியம் கர்மகாரகனாகவும் இருப்பார். இந்த இடத்தில் செவ்வாய் ஒரு கேந்திரதிபதியாகவும் ஓரும் திரிகோணாதிபதியாகவும் இருந்து யோகாதிபதியாகவும் செயல்படுவார். ஆனால் இங்கு அதே செவ்வாய் 28ºயில் நீச்சம் பெற்று அதன் ராஜ யோகத்தை அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப கூட்டியோ அல்லது குறைத்து சூட்சமாக செயல்படுவார். இந்த கடக லக்கின காரர்களுக்கு குரு ஆறுக்கும் ஒன்பதுக்கு உரிய வேலையான நோய், கடன், மற்றும் பாக்கியத்தை தருபவர் அவரே கடகத்தில் 5ºயில் உச்சம் பெறுகிறார். சனியானவர் இவருக்கு களத்திரகாரனாகவும், அஷ்டமாதிபதியாகவும் செயல்படுவார். இங்கு புதன் சனி ராகு கேது பகைவர்களே. இருந்தாலும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப மாறுபடும். இங்கு கூறும் அனைத்தும் பொதுப்பலன்களாக கூறப்படுகிறது. அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப நன்மை தீமை மாறுபடும்.

கடக லக்கினகாரர்கள் மனதை அலைபாய்ந்துகொண்டே இருப்பார்கள், பாசமிக்கவர்கள், பயம் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள் (basement weak), தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளப் புத்தியை பயன்படுத்தி வேலை செய்வார்கள், வசீகர அழகு உண்டு, ஆளுமைமிக்க பதவியில் இருப்பவர்கள், எல்லோரையும் வழி நடத்தும் திறன் கொண்டவர்கள், பேச்சிலேயே ஆளை எடைபோடும் தன்மை கொண்டவர்கள், மூளை கட்டளையிடுவற்குமுன் துரிதமாக தன் வேலையை செய்வார்கள், தனித்துவம் மிக்கவராக காட்டிக்கொள்வர், தெய்வ அனுக்கிரகம் கொண்டவர்கள், படபடப்பாகச் சிலசமயம் இருப்பார்கள், எல்லா ஜீவராசிகளிடம் அன்பு காட்டுவார்கள், வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிப்பார்கள், தலைமைப் பண்பும், சுறுசுறுப்பானவர், மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்கவேண்டும், பெரிய மனிதர்களோடு நட்பு இவர்களுக்கு பிடிக்கும்.

ஆண்டுக்கொருமுறை நண்டுகளின் மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. அதுபோல தன் திறமை மற்றும் அனைத்தையும் புதுப்பித்துக் கொள்வார்கள். கோட்சர ராகு பயணிக்கும் காலம் வெளியூர் பிரயாணம் கிட்டும். புனர்பூசம் (4), பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் லக்கினம் இருக்கும்பொழுது அந்தந்த நட்சத்திர செயல்களைப் பார்ப்போம்.
  
புனர்பூசம் (4)

புனர்பூச நட்சத்திரம் குருவின் ஆதிக்கம் கொண்டது.  இந்த நட்சத்திர பாதத்தில் கிரகங்கள் வர்கோத்தமம் பெரும். குருவானவர் குருவின் சாரம் கொண்ட விசாகம், புரட்டாதி, புனர்பூசம் நான்காம் பாத காலில் நின்றாள் வாழ்வில் முக்கால் சதவீதம் ஜாதகர்கள் உச்சம் பெற்றவராக இருப்பார்கள் இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், செயலில் உறுதிமிக்கவர், மனம் மற்றும் உடலில் வீரம் குறைவாக இருக்கும், தெளிவான குணம் கொண்டவர்கள், களத்திரத்தில் கொஞ்சம் பிரச்னை உண்டு, அழகான உடல் அமைப்பு உடையவர்கள், பாராட்டுமிக்கவர்கள், சிலருக்கு தந்தை வழியில் பொருள் ஈழப்பு உண்டு, பூர்விக சொத்துகள் நீண்ட நாட்கள் பிறகு கிடைக்கும், அரசு சார்ந்த உதவி கிட்டும், படிப்பதில் அதிக ஆர்வம் மிக்கவர், விஞ்ஞானத் துறையில் மற்றும் ஆராய்ச்சில் சிறந்து விளங்குவார்கள்.

பூசம்

பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்டது. பூசம் நட்சத்திரத்தில் லக்கினம் அமையப்பெற்றவர்கள் புத்திக்கூர்மை, அதிக நினைவாற்றல் மிக்கவர்கள், மற்றவர் சொல்லுவதை மனதில் உள்வாங்கிக்கொள்பவர்கள், நின்று நிதானமாக செய்பவர்கள், அமைதியானவராகக் கட்டிக்கொள்வார்கள், சுதந்திரமாக வாழ நினைப்பவர்கள். கோபக்காரர்கள், கொஞ்சம் திருட்டுத் தனம் இருக்கும், பெற்றோரிடம் அன்பாக இருப்பார்கள், பொலிவுமிக்கவர்கள், அழகானவர்கள், மாற்றி மாற்றி பேசுவார்கள், சந்தனம் போன்ற இயற்கை வாசனை விரும்பிகள், பசி தாங்கமாட்டார்கள், படிப்பு கொஞ்சம் மந்தம், நிறைய பேறு பெற்றவர்கள், நல்ல பண்பு மிக்கவர்கள், கள்ளம் கபடமற்றவர்கள். 

ஆயில்யம்

ஆயில்யம் புதனின் ஆதிக்கம் கொண்டது. இந்த நட்சத்திர காலில் லக்கினம் அமையப்பெற்றால் மதி நூட்பமாக பேசுபவர்கள், பகைவர் என்றாலும் பாசமாக நடத்துவார்கள், தாய் தந்தையாருக்கு பிடித்தமாதிரி நடப்பவர்கள், கடவுள் பக்தி கொண்டவர்கள், கவலையாக இருப்பான், கானகங்களில் சஞ்சரிப்பார், மென்மையான மனமுடையவர்,  கல்வி கற்பதில்  விரும்புவீர்கள், சாப்பிடுவது பிடிக்கும் ஆனால் வறியவன் போல் அற்பமாக சாப்பிடுவார்கள், எல்லாரையும் பரிகாசம் செய்வான், ஆற்றல் மிக்கவராய் கண்டு அஞ்சமாட்டேன், பேசுவதில் நகைச்சுவை தன்மை இருக்கும், திட்டமிடுதல் மூலம் எதிர்காலத்தைக் கணிப்பார்கள், குடும்பத்தாரை நேசம் கொண்டவர்கள், சரளமாகப் பேசுபவர்கள், உடல் மற்றும் மன வலுமைமிக்கவர் அழகான கண்புருவங்கள் உடன் பொலிவான தோற்றம் இருக்கும்- என்றெல்லாம் பல்வேறு நூற்களின் வாயிலாக கூறப்பட்டுள்ளது.

இந்த வரும்  வருட குருபெயர்ச்சி கடக லக்கினகாரர்களுக்கு பொதுப்பலன் (2019-2020)

தொழில் மூலம் லாபம் கிட்டும், அதன் மூலம் குடும்பத்திற்கு தேவையானவை செய்வார்கள், சுப விரயம் ஏற்படும், உடன் பிறந்தவர்கள் குடும்பத்தில் நல்லது நடக்கப்படும், நோயால் பாதிக்கப்படுபவர்கள் குணமாக சரியான காலம், அலுவலகத்தில் உயர்வு கிடைக்கும், முற்பிறவி கர்மங்களை கழிக்கும் காலம் அதாவது தானங்கள் தர்மங்கள் மூலம் குறைத்துக்கொள்ள சரியான தருணம், குழந்தைகளை படிப்புக்கு பணம் கிடைக்கும். இந்த இடத்தில குரு சுபர், மற்றும் இவர் பார்வை பலம் மற்றும் ஜெனன ஜாதகத்திற்கு ஏற்ப  நற்பலன்கள் கிட்டும். இந்த இடத்தில குரு சுபர். ஜெனன ஜாதகத்திற்கும் ஏற்ப தசை புத்தி மற்றும்  அன்றய மற்ற கிரங்களின் கோட்சர நிலவரப்படி  பலன்கள் மாறுபடும்.

குருவே சரணம்  

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com