தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மார்கழி மாதப் பிறப்பு: அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

மார்கழி மாதப் பிறப்பையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

News image

வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவர் ஸ்ரீபெரிய நாயகர், ஸ்ரீபராசக்தி அம்மன்.

Updated On :17 டிசம்பர் 2020, 12:02 am

தினமணி


திருவண்ணாமலை:  மார்கழி மாதப் பிறப்பையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. 
தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் வெள்ளிக் கவசம் அணிந்து உற்சவர் ஸ்ரீபெரிய நாயகர், ஸ்ரீபராசக்தி அம்மன் எழுந்தருளினர். 
உற்சவர், மூலவர் சுவாமிகளை அதிகாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 
திருவெம்பாவை சொற்பொழிவு: உண்ணாமுலையம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவு  நடைபெற்றது. நல்லாசிரியர் சீனுவாசவரதன் சொற்பொழிவாற்றினார். 
தொடர்ந்து, மார்கழி மாதம் முழுவதும் இந்த சொற்பொழிவு நடைபெறுகிறது.
நடை திறப்பு நேரம் மாற்றம்: 
கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டபோது காலை 6.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மார்கழி மாதப் பிறப்பையொட்டி மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 5.30 மணிக்கே நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.