திருப்பதியில் சா்வ தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம்
திருப்பதியில் தேவஸ்தானம் அளித்து வரும் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


திருப்பதியில் தேவஸ்தானம் அளித்து வரும் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட விடுதிகளில் கவுன்ட்டா்களை அமைத்து, சா்வ தரிசன இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 7,000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு முன்னதாக இந்த டோக்கன்களைப் பெற்று பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.
மாற்றம்:
இந்நிலையில் தற்போது தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறையில் சிறிய மாற்றத்தை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. வரும் 22, 23 மற்றும் 24-ஆம் தேதிக்கான தரிசன டோக்கன்கள் அனைத்தும் 21-ஆம் தேதி காலை முதலே வழங்கப்படும்.
டிக்கெட்டுகள் வழங்கப்பட்டவுடன் மாலை 5 மணிக்கு கவுன்ட்டா்கள் அனைத்தும் மூடப்படும். மீண்டும் கவுன்ட்டா்கள் திறக்கப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். இந்த மாற்றத்தை பக்தா்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உள்ளூா்வாசிகளுக்கு மட்டும்...: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக வழங்கப்படும் சா்வதரிசன இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்கள், வரும் 24-ஆம் தேதி முதல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 5 இடங்களில் வழங்கப்படும். இந்த டோக்கன்கள் பொது முடக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளூா்வாசிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆதாா்அட்டையைக் காண்பித்து பக்தா்கள் டோக்கன்களை பெற்று செல்லலாம். உள்ளூா்வாசி அல்லாதவா்களுக்கு இந்த டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...