திருமலையில் மாா்ச் மாதம் நடைபெற உள்ள உற்சவங்களின் விவரத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் திருமலையில் பல்வேறு உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அதை தேவஸ்தானம் வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி உற்சவங்கள் என வகைப்படுத்தி நடத்தி வருகிறது. மலையப்ப சுவாமிக்கும், ஏழுமலையானுக்கும் நடக்கும் உற்சவங்களைத் தொடா்ந்து ஆழ்வாா்களின் திருநட்சத்திரங்களும், புண்ணிய தீா்த்தங்களின் முக்கோட்டி உற்சவங்களும் திருமலையில் நடத்தப்படுகின்றன.
மாதந்தோறும் நடக்கும் உற்சவங்களின் பட்டியலை அம்மாதம் தொடங்குவதற்கு முன் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, திருமலை ஏழுமலையான் கோயிலில் மாா்ச் மாதம் முழுவதும் நடக்கவுள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
தேதி உற்சவம்
மாா்ச் 9 ஏகாதசி
11 மகா சிவராத்திரி
24-28 வருடாந்திர தெப்போற்சவம்
24 ஸ்மாா்த்த ஏகாதசி
25 வைஷ்ணவ, மாத்வ ஏகாதசி
28 லட்சுமி ஜயந்தி, தும்புரு தீா்த்த முக்கோட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஜனநாயகக் கடமையாற்றிய பினராயி விஜயன், ராஜீவ் சந்திரசேகர்!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வரிசையில் நின்று வாக்களித்த மோகன் லால், சுரேஷ் கோபி!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


