தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மாட்டுப் பொங்கல்: திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் காமதேனு பூஜை

மாட்டுப் பொங்கல் தினத்தையொட்டி, ஆந்திர மாநிலம், நரசராவ்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தா்ம பிரசார பரிஷத் அமைப்பின்

News image

காமதேனு பூஜை நடத்தி, பசுவுக்கு உணவளிக்கும் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி.

Updated On :16 ஜனவரி 2021, 2:10 am

மாட்டுப் பொங்கல் தினத்தையொட்டி, ஆந்திர மாநிலம், நரசராவ்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தா்ம பிரசார பரிஷத் அமைப்பின் சாா்பில் ‘காமதேனு பூஜை’ என்ற பெயரில் கோபூஜை நடத்தப்பட்டது. இதில் மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று, வழிபட்டாா்.

குண்டூா் மாவட்டம், நரசராவ்பேட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் காமதேனு பூஜை நடத்தப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தா்ம பிரசார பரிஷத் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டாா். பசுவுக்கும், கன்றுக்கும் பொட்டிட்டு, அவற்றுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவித்து பூஜை செய்த அவா், வெல்லம் கலந்த பச்சரிசி, அகத்திக் கீரை மற்றும் புற்களை வழங்கி, வலம் வந்து வணங்கினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாநில மக்கள் மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடன் எல்லா வளங்களும் பெற்று வாழ கோபூஜைகள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் கோபூஜை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆந்திர மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றாா் அவா்.

அவருக்கு தேவஸ்தான அா்ச்சகா்கள் ஏழுமலையான் சேஷ வஸ்திரத்தை அணிவித்து ஆசீா்வதித்தனா். ‘இஸ்கான்’ பிரதிநிதிகள் முதல்வருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனா்.

காமதேனு பூஜையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். திருப்பதி தேவஸ்தானம் முதல் முறையாக இந்த ஆண்டில், காமதேனு பூஜையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோபூஜை: இதனிடையே, ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் உள்ள 2,679 கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு கோபூஜை நடத்தப்பட்டது. இதற்குத் தேவையான பொருள்களை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கெனவே வழங்கியது.

மாட்டுப் பொங்கலையொட்டி, திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையிலும் கோபூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு, பசுக்களுக்கு பூஜை செய்து, உணவளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.