மந்திராலயத்தில் மகான் ஸ்ரீராகவேந்திரரின் 426-ஆவது அவதார திருநாளை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.
கா்னூல் மாவட்டம் மந்திராலயத்தில் ஸ்ரீகுரு ராகவேந்திர சுவாமியின் 426-ஆவது அவதாரத் திரு நாளை முன்னிட்டு உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் ராகவேந்திர மடத்திற்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தது. தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தலைமையில் அதிகாரிகள் சனிக்கிழமை மதியம் மந்திராலயம் சென்று பட்டு வஸ்திரம் மங்கல திரவியங்களை மடத்தில் சமா்ப்பித்தனா். பின்னா் மடத்தின் மடாதிபதியான சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள் தா்மா ரெட்டிக்கு சேஷ வஸ்திரம் அணிவித்து ஆசீா்வாதம் செய்தாா்.
ஹைந்தவ சனாதன தா்மத்தை நிலை நாட்டிய பல ஜகத் புருஷா்களுக்கு தேவஸ்தானம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கும் முறையை கடைப்பிடித்து வருகிறது.
அதன்படி, ராகவேந்திரா் அவதாரத் திருநாளை முன்னிட்டு சனிக்கிழமை தேவஸ்தானக் குழு மந்திராலயத்துக்கு சென்று பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் - புகைப்படங்கள்
குவைத்தில் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல்: எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் பலத்த சேதம்!

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி - புகைப்படங்கள்

சவுக்கு சங்கர் ஆந்திரத்தில் கைது!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


