/

சதுரகிரி மலைக் கோயிலுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு அனுமதி!

மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஜனவரி 4 முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.

News image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம்

Updated On :3 ஜனவரி 2023, 9:32 am

மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஜனவரி 4 முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜனவரி 4(நாளை) பிரதோஷமும், ஜனவரி 6-ம் தேதி பெளா்ணமி வழிபாடும் நடைபெற உள்ளன.

இதையொட்டி, ஜன.4 முதல் 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியது.

காலை 7 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலை ஏற அனுமதி வழங்கப்படும். அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.