குழப்பங்கள் தீரும் தனுசு ராசிக்கு: வார பலன்கள்

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
வார பலன்கள்
வார பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 2 - 8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு செயலாற்றுவீர்கள். சிக்கனமாக வாழ்வீர்கள். தொழிலில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். உங்களுடன் பணிபுரிவோரும் உதவுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின்ஆதரவு பெருகும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சரியான முறையில் செயலாற்றுவீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

பெண்கள் விரக்தியில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 13, 14, 15.

2. ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உயர்ந்தோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். புகழ் உயரும். விலகிய உறவினர்கள் குடும்பத்தோடு இணைவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகள் புதியதாக கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் முக்கிய பிரச்னைகளில் ஒதுங்கியிருப்பீர்கள். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் நாடி வருவோருக்கு உதவுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3. மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உடல் உபாதைகள் மறையும். அரசு உதவிகள் கிடைக்கும். பெயர் அந்தஸ்துக்கு எந்தக் குறையும் இருக்காது. தொழில்நுட்பங்களைக் கற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது எண்ணங்களை மேலதிகாரிகளிடம் பகிர்வீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைப்பீர்கள். விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும்.

அரசியல்வாதிகளின் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். கலைத் துறையினர் சக கலைஞர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தினரின் அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4. கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பச் சுமைகளைத் தாங்குவீர்கள். பொருளாதார விஷயங்கள் சீராகும். உறவினர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாக நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிலவிய நெருக்கடிகள் குறையும். வியாபாரிகளுக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விவசாயிகள் உயர்வைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பிரசாரத்துக்கு நேரம் ஒதுக்குவீர்கள். கலைத் துறையினர் சந்தர்ப்பங்கங்களைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பீர்கள். மாணவர்கள் பிறரிடம் நன்கு பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5. சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

நீண்ட கால எண்ணம் நிறைவேறும். பெற்றோரிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளுவைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் பொருளாதாத்தில் மேன்மையைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு குத்தகைப் பாக்கி வசூலாகும்.

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளுக்குத் தக்க அறிவுரையை கூறுவீர்கள். மாணவர்கள் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6. கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பேச்சிலும் நடையிலும் வசீகரம் பெருகும். எதிர்பார்த்த அரசு உதவிகள் கிடைக்கும். பெயரும் புகழும் உயரும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் நஷ்டங்களில் இருந்து மீள்வீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். பெண்களுக்கு இருந்துவந்த சங்கடங்களும் குழப்பங்களும் தீரும். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் பெருகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7. துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

உடல்நலம் சீராகும். எண்ணங்கள் நிறைவேறும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களின் அலட்சியப் போக்கு வருத்தம் அளிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் கடன் கொடுக்காதீர்கள். விவசாயிகளுக்கு வெற்றிகள் உண்டாகும்.

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறனைக் கண்டு மேலிடம் பாராட்டும். கலைத் துறையினருக்கு சில பயணங்கள் தள்ளிப் போகலாம்.

பெண்களுக்கு கணவருடனான அன்னியோன்யம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டும் ஆதரவும் ஊக்கம் தரும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

8. விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உடன்பிறந்தோர் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். குழந்தைகளின் விஷயங்களில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம், உணவு விஷயங்களில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் எதையும் சமாளிக்கும் பக்குவம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் அங்கீகரிக்கப்படும். பெண்கள் பிறரிடம் பேசும்போது கவனம் தேவை. மாணவர்கள் விளையாட்டுகளில் கவனமாக ஈடுபடவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சிந்தனையில் இருந்த குழப்பங்கள் தீரும். மனம் ஒருநிலைப்படும். யோசித்து விவேகத்துடன் இருப்பீர்கள். சுபச் செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கலில் லாபம் உண்டாகும். விவசாயிகள் விளைச்சலைப் பெகுக்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கலைத் துறையினர் பிறரிடம் நல்லமுறையில் நடப்பீர்கள்.

பெண்களுக்கு சுபச் செலவுகள் கூடும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10. மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்களை உடனடியாக முடிப்பீர்கள். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரிகள் விற்பனையை உயர்த்துவீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயலாற்றுவீர்கள். கலைத் துறையினர் செயல்களில் உற்சாகம் அதிகரிக்கும்.

பெண்கள் வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். மாணவர்கள் வருங்காலத்துக்கான பயிற்சிகளில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் லாபம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பீர்கள். விவசாயிர்கள் பயிர்களைப் பாதுகாப்பீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் பேச்சுக்கு மரியாதை அளிப்பீர்கள். கலைத் துறையினர் பிறரை அனுசரித்து நடப்பீர்கள். பெண்கள் குடும்பத்தின் ஒற்றுமையைக் காப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின்

வழிகாட்டுதல்படி நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 9, 10.

12. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவருவீர்கள். கடமையை உணர்ந்து பணியாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வீடு கட்ட கடன் கிடைக்கும். வியாபாரிகளிடம் கூட்டாளிகள் அனுகூலமாக இருப்பார்கள். விவசாயிகள் வரப்பு பிரச்னைகளில் சுமுக முடிவைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்குப் பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் நட்புடன் பழகுவீர்கள். பெண்கள் கவனமாகச் செயல்படவும். மாணவர்களின் திட்டங்கள் வெற்றி பெறும்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 11, 12.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com