12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்.16 - பிப்.22) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்குமான வாரப் பலன்கள்
12 ராசிக்குமான வாரப் பலன்கள்

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலை சீராகத் தொடரும். மனக் குழப்பங்கள், சஞ்சலங்கள் குறையும். பெரியோரின்

அறிவுரை மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு வியாபாரம் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு லாபம் உண்டு. அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் கண்ணியத்துடன் ஈடுபடுவீர்கள்.

கலைத் துறையினர் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.

மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

நல்லவர்களால் நன்மை அதிகரிக்கும். பயணங்களால் தொழிலுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொல்லை அளித்தவர்கள் அடங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகள் அநாவசியச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள்.

விவசாயிகளுக்கு மகசூல் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு கூடும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவருடன் பரஸ்பரம் அன்பைப் பாராட்டுவீர்கள். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அந்தஸ்து உயரும். உங்கள் பேச்சை உடனிருப்போர் கேட்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனங்களை வாங்க முயற்சிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கலைத் துறையினர் சிக்கனமாகச் செலவழிப்பீர்கள்.

பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் ஆத்ம பலம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்}இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். வருமானம் உயரும். தேவைகள் நிறைவேறும். பெற்றோருடன் இணக்கமாவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் நன்கு பழகுவீர்கள்.

வியாபாரிகள் புதிய இடங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் சந்தையில் முக்கியத்துவம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் எண்ணத்தை நிறைவேற்றுவீர்கள்.

கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளால் பெருமையடைவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்கள் சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம்}இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் தடைகளை முறியடித்து, முன்னேறுவீர்கள். உடல் உபாதைகள் மறையும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

பண விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு கடன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகள் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு பால் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பேச்சில் நிதானம் தேவை. கலைத் துறையினர் சிறிய தடங்கல்களைச் சந்திப்பீர்கள்.

பெண்கள் சந்தோஷமாக காரியங்களை ஆற்றுவீர்கள். மாணவர்கள் நண்பர்களுடன் கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பண நடமாட்டம் கூடும். புதிய சேமிப்புகளில் சேர்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான நல்ல மாற்றம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகள் ஊழியர்களைக் கௌரவப்படுத்துவீர்கள்.

விவசாயிகளுக்கு தானியங்களில் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பும் செல்வாக்கும் கூடும். கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும்.

பெண்களுக்கு குடும்பத்தில் சிறு பிரச்னைகள் தோன்றி விலகும். மாணவர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 16.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். உடனிருப்போர் ஆதரவாய் இருப்பார்கள். முயற்சிகளில் தீவிரம் அதிகரிக்கும். எதிலும் நேர்மையாக இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பேச்சில் நிதானம் தேவை.

கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் புதியவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பேச வேண்டாம். மாணவர்களுக்கு எதிர்பார்த்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

சந்திராஷ்டமம்- பிப். 17, 18.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் உயர் நிலையை அடைவீர்கள். வங்கிக் கடன் பெற்று, புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். உடல் உபாதைகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வரவேற்பு உண்டு. கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் கணவருடன் பரஸ்பரம் அன்பைப் பாராட்டுவீர்கள். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம்} பிப். 19, 20.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இழுபறியான காரியங்கள் சாதகமாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். குழந்தைகளின் கல்வித் திறனால் பெருமையடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் அநாவசியச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள்.

விவசாயிகள் விவசாயப் பணிகளில் நேரடி கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். கலைத் துறையினர் புதிய கலைகளைக் கற்பீர்கள்.

பெண்கள் உறவினர் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம்} பிப். 21, 22.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நன்மைகள் கிடைக்கும். பயணங்களால் பலன் கிடைக்கும். தொல்லை கொடுத்தவர்கள் அடங்கிவிடுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணிகளை கவனமாகச் செய்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்}இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தேவையான அளவில் பொருளாதாரம் பெருகும். குடும்பத்தினரை அனுசரித்து நடப்பீர்கள். விருந்துகளில் பங்கேற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணியை செய்ய நேரிடும். வியாபாரிகளுக்கு புதிய ஊக்கம் உண்டாகும். விவசாயிகள் புதிய தானியங்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலில் தலையிட மாட்டீர்கள். கலைத் துறையினர் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளைக் கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் இருந்த தடைகளை முறியடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகவே தொடரும். கடன் கொடுக்க வேண்டாம். நண்பர்களுடன் கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களின் பணவரவுக்கு தடை இருக்காது. வியாபாரிகள் புதிய முதலீடுகளில் வெற்றி காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்குப் பேச்சில் கவனம் தேவை. மாணவர்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.