இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்: வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்.23 - பிப்.29) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
வாரப் பலன்கள்
வாரப் பலன்கள்

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பெரியோர்களைச் சந்திப்பீர்கள். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். உங்கள் பேச்சை நண்பர்கள் கேட்பார்கள். உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் கடன்களை அடைப்பீர்கள்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகள் முக்கியப் பிரமுகராக வலம் வருவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

மாணவர்கள் கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். உடனிருப்போர் உங்களுக்கு மதிப்பளிப்பார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் புதிய பொருள்களைச் சந்தையில் விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு பிறர் உதவுவார்கள். பெண்கள் வெளிப்படையாகப் பேச வேண்டாம். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

துணிவு, பொறுமை, விடாமுயற்சியோடு காரியங்களைத் தொடங்குவீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். புதிய வீடு வாங்க முயற்சிப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாய் பணிபுரிவார்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சிறப்புகளைக் காண்பீர்கள். விவசாயிகள் திட்டமிட்டு பணிகளைச் செய்வார்கள். அரசியல்வாதிகள் புதிய பதவிகளில் செயலாற்றுவார்கள்.

கலைத் துறையினர் அநாவசியச் செலவுகளை செய்ய மாட்டீர்கள். மாணவர்கள் பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் தடங்கல்களை முறியடித்து முன்னேறுவீர்கள். உடல் உபாதைகள் நீங்கும். யாருக்கும் கடன் தர வேண்டாம். நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளின் பொருள்களுக்கு வரவேற்பு கிடைக்கும்.

விவசாயிகளின் புதிய முயற்சிகள் வீண்போகாது. அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவர் குடும்பத்தாருடன் பாசமாக இருப்பீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தேவைக்கேற்ப வருமானம் கூடும். குடும்பப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். சிலர் புதிய வீடுகளுக்கு மாறுவீர்கள். வாகனங்களின் பராமரிப்புச் செலவுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் பிறரின் பணிச்சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு பயிர்களில் பாதிப்பு இருக்காது.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைத் தக்க வைப்பீர்கள்.கலைத் துறையினரின் பணவரவு திருப்தியாக இருக்கும். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் விரும்பியபடி நடக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

ஆன்மிகத்தில் ஈடுபாடும். பண நடமாட்டமும் அதிகரிக்கும். எதிர்பாராத சில விஷயங்கள் தாமதமாக நிறைவேறும். வழக்குகளில் சாதகமான மாற்றம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.

வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களால் லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்களுக்குப் பேச்சில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் வெற்றிப் படிகளில் பயணிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். அரசு உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களின் எண்ணங்கள் நிறைவேறும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் நிதானமாகப் பேசவும். கலைத் துறையினர் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவால் நன்மைகளை அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிறையும். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவீர்கள். நேர்மையாக நடப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் துணிவுடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினரின் தனித்தன்மையும் திறமையும் வெளிப்படும். பெண்கள் ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் -இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் சுபிட்சத்தை காண்பீர்கள். புதிய திட்டங்களை வகுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். புதிய நுணுக்கங்களைக் கற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். வியாபாரிகள் பிறருடன் சகஜமாக பழகுவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் கூடுதல் வருமானம் பெறுவீர்கள் அரசியல்வாதிகளின் கடமையில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கலைத் துறையினருக்கு பிறர் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றி மறையும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - பிப். 23.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் அறிவாற்றலும் திறமையும் பளிச்சிடும். தொழிலில் ஏற்றம் உண்டாகும். உடன்பிறந்தோருக்கும் உதவுவீர்கள். எவருக்கும் பணம் வாங்கித் தர வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயரை எடுப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை மேலிடம் நிறைவேற்றும். கலைத் துறையினர் புதிய நுணுக்கங்களைக் கற்பீர்கள். பெண்கள் பேச்சைக் குறைக்கவும். மாணவர்கள் விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 24, 25.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் நிறையும். பெற்றோரின் ஆதரவு கூடும். நல்ல செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம், மனவளம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைப் பதற்றப்படாமல் செய்வீர்கள். வியாபாரிகள் தனித்து முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரை

அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய நட்புகள் கிடைக்கும். பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் நேரத்தை வீணாக்க மாட்டீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 26, 27, 28.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரம் படிப்படியாக உயரும். தொழிலை சிரத்தையாக நடத்துவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். எதிர்ப்புகள் இருக்காது. உத்தியோகஸ்தர்கள் சாதுர்யமாக நடப்பீர்கள். வியாபாரிகள் சேமிப்புகளில் இருந்து கடையைச் சீரமைப்பீர்கள்.

விவசாயிகள் புதிய நிலங்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் கடுமையாக உழைப்பீர்கள். கலைத் துறையினருக்கு சக கலைஞர்களின் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற பயிற்சி எடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 29.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.