ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜூலை 12ல் கார்கோடகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்!

பீமன்மகாராஜா, ருதுபர்ண மகாராஜா, பரிஷத் மகாராஜா, நளமகாராஜா ஆகியோர் வழிபட்ட தலம்..

News image
அரவூர் மங்களாம்பிகா சமேத கார்கோடகேஸ்வரர்
Updated On :22 ஜூன் 2024, 7:08 am

DIN

அரவூர் மங்களாம்பிகா சமேத கார்கோடகேஸ்வரர் கோயிலில் வரும் ஜூலை 12ல் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவம் என்றால் பாம்பு என்று பொருள்படும். பாம்பு வழிபட்டதால் அரவூர் என்றழைக்கப்படுகிறது.

பாம்புகளில் கார்கோடகன் என்ற பாம்பு சிவபெருமானை வழிபட்டதால் கார்கோடகேஸ்வரம் என்ற ஊர் நாளடைவில் அரவூர் என்று அழைக்கப்பட்டது.

கார்கோடகன் வழிபட்ட சிவனை வழிபட்டால் இழந்த அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் மீண்டும் பெறுவர் என்பது மக்களின் நம்பிக்கை. கார்கோடகனை வழிபட்டதில் பீமன்மகாராஜா, ருதுபர்ண மகாராஜா, பரிஷத் மகாராஜா, நளமகாராஜா ஆகியோர் அடங்குவர்.

அரவூரில் பாம்பினால் யாருக்கும் தீயது ஏற்படாது என்பது ஐதீகமாக போற்றப்படுகிறது. கார்கோடகனை வழிபட்டால் ராகு, கேது தோஷ நிவர்த்தி, சனிதோஷம் நீங்குவதோடு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் பெறலாம்.

இக்கோயில் கல்யாணராமரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று மகாகும்பாபிஷேக விழா வரும் ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெறவுள்ளது.

இதனைமுன்னிட்டு நான்கு கால யாகபூஜைகள் ஜூலை 10 ம் தேதி புதன்கிழமை மாலை தொடங்கி நடைபெறும்.

தொடர்புக்கு: 9488109428

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.