
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சினேகவல்லி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது
இக்கோயில் பாண்டி ஸ்தலம் 14ல் இது 8 ஸ்தலம் ஆகும். இக்கோயிலில் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், அப்பர் ஆகியோர் வந்து பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
இக்கோயிலின் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா வருகிற திங்கள்கிழமை காலை சிவாச்சரிகள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
இதனைத் தொடாந்து, அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளுடன தீமராதனை காண்பிக்கப்பட்டன.
தொடர்ந்து, பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் 1ஆம் திருநாளான இந்திர விமானத்தில் சுவாமி அம்மன் வீதி உலா, 14 ஆம் தேதி பல்லக்கு, 15ஆம் தேதி பூத வாகனம், 16 ஆம் தேதி கைலாச வாகனம், 17 ஆம் தேதி யானை வாகனம், 18 ஆம்தேதி வெள்ளி ரிஷப வாகனம், 19 ஆம் தேதி இந்திர விமானம், 20 ஆம் தேதி குதிரை வாகனங்களில் சுவாமியும் அம்மனும் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 21ம் தேதி நடைபெறும். 22 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது .
விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் பாண்டியன், 22 1/2 கிராம நாட்டார்கள் மற்றும் நகர்நல கமிட்டியாளர்கள் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.