
பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.
வழக்கமாக செவ்வாய் மற்றும் கிருத்திகை நாள்களில் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்ற நிலையில், செவ்வாய்க்கிழமையில் கிருத்திகை வந்ததால், ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சிறுவாபுரி முருகன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் திரண்டிருப்பதாகவும், நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்களின் வருகை கடந்த ஒரு சில ஆண்டுகளாக அதிகமாக உள்ளது. அதுபோல கிருத்திகை நாள்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இன்று, சித்திரை கிருத்திகை, செவ்வாய்கிழமை என்பதால் சிறுவாபுரிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
விடுமுறைக் காலம் என்பதால், காலை முதலே ஏராளமான பக்தர்கள் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வருகைத் தரத் தொடங்கினர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.