ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்: லட்சக்கணக்கானோர் பொங்கலிட்டு வழிபாடு!

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கானோர் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகிறார்கள்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா
Published on
Updated on
2 min read

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில், லட்சக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக மார்ச் 6ஆம் தேதி காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் வருடாந்திர பொங்கல் விழா
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் வருடாந்திர பொங்கல் விழா

இந்த நிலையில், இன்று காலை முதல் கோயிலின் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

இன்று காலை சுத்த புண்ணிய சடங்களுக்கு பின்னா், காலை 10.15 மணிக்கு, கோயில் முன்புள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது. அதையடுத்து, பக்தா்கள் பொங்கலிடத் தொடங்கினர்.

பிற்பகல் 1.15 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் நடைபெறும். இரவில் அம்மன் நகா்வலம் நிறைவடைந்த பின்னா், 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு குருதி தா்ப்பணத்துடன் திருவிழா நிறைவடையும். நிகழாண்டு பொங்கல் விழாவில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

பெண்களின் சபரிமலை!

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஆற்றுக்கால் பொங்கல் விழா இன்று (மார்ச் 13) கொண்டாடப்படுவதையொட்டி, கடந்த சில நாள்களுக்கு முன்பிலிருந்தே பொங்கல் வைக்க உகந்த இடத்தைத் தேர்வு செய்ய பக்தர்கள் வரத் தொடங்கியிருந்தனர்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள்கள் திருவிழாவின் இறுதிநாளான இன்று காலை 10.30 மணியளவில் பொங்கல் வைபவம் தொடங்கியது. முதலில் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த ‘பண்டார அடுப்பு’ என்றழைக்கப்படும் பொங்கல் அடுப்பை, பக்தர்களின் சரண கோஷம் முழங்க கோயில் தலைமை அர்ச்சகர் பற்ற வைத்து பொங்கல் விழாவை தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் பொங்கலிடத் தொடங்கினர்.

கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் திருவனந்தபுரத்தில் திரண்டு சாலைகளில் வழிநெடுக பொங்கலிட்டு வருகிறார்கள்.

இதையொட்டி, திருவனந்தபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசு, கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தர்களுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவையொட்டி, முக்கிய பகுதிகளிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com